Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையில் போட்டியை ஆட முடியாது என சொல்ல முடியுமா? வரலாறு என்ன சொல்லுது?

மும்பை : காஷ்மீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் ஆடக் கூடாது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

2019 உலகக்கோப்பையில் தான் அடுத்ததாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தியா அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடக் கூடாது என பலரும் கூறி வரும் நிலையில் அது சாத்தியமா? இதற்கு முன்பு அப்படி நடந்துள்ளதா? என பார்த்தால் நான்கு முறை பல்வேறு அணிகள் தங்கள் உலகக்கோப்பை போட்டியை ஆடாமல் இருந்துள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை போட்டி

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை போட்டி

1996இல் இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த குண்டு வெடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை செல்லவில்லை. வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் பங்கேற்காததால், இலங்கை அணி இரண்டு புள்ளிகள் பெற்றது. அந்த உலகக்கோப்பை இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா - இலங்கை போட்டி

ஆஸ்திரேலியா - இலங்கை போட்டி

ஆஸ்திரேலிய அணியும் 1996இல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணியும் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை செல்லாமல், தங்கள் இரண்டு புள்ளிகளை விட்டுக் கொடுத்து விட்டது.

இங்கிலாந்து - ஜிம்பாப்வே போட்டி

இங்கிலாந்து - ஜிம்பாப்வே போட்டி

2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டில் இருந்த அரசியல் குழப்பம் மற்றும் மிரட்டல்களை அடுத்து ஜிம்பாப்வே நாட்டுக்கு செல்லவில்லை. இதனால், இங்கிலாந்து அணி அந்த தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு வேண்டிய புள்ளிகள் பெற முடியாமல் வெளியேறியது. ஆனால், ஜிம்பாப்வே அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு சென்றது.

நியூசிலாந்து - கென்யா போட்டி

நியூசிலாந்து - கென்யா போட்டி

அதே 2003ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி, கென்யாவிற்கு எதிரான போட்டியை ஆடவில்லை. அதற்கு காரணம் நைரோபியில் நடைபெற இருந்த போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதே காரணம் என கூறப்பட்டது.

இந்தியாவும் போட்டியை கை விடுமா?

இந்தியாவும் போட்டியை கை விடுமா?

இந்தியாவும் இந்த வரிசையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை கைவிடலாம். ஆனால், அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க நேர்ந்தால் இந்தியா என்ன செய்யும்?

Story first published: Friday, February 22, 2019, 14:24 [IST]
Other articles published on Feb 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+