Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை மேட்ச் ஜெயித்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்? வாய்ப்பு இருக்கா, இல்லையா?

சென்னை : 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஆடிய முதல் ஆறு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா? அதற்கு எத்தனை வெற்றிகளை பெற வேண்டும்? சிஎஸ்கே அணிக்கு இன்னும் எத்தனை லீக் போட்டிகள் மீதம் உள்ளன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்ததில்லை. அப்படி ஒரு மோசமான நிலைமையை 2025 ஐபிஎல் தொடரில் சந்தித்து இருக்கிறது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஆடிய ஐந்து போட்டிகளில் ஐந்து வெவ்வேறு அணிகளுக்கு எதிராக படுதோல்விகளை சந்தித்து இருக்கிறது.

Chennai Super Kings IPL 2025 IPL Points Table

இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு புள்ளிகளுடன் -1.554 என்ற நெட் ரன் ரேட் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி இன்னும் ஏழு வெற்றிகளை பெற வேண்டும். பொதுவாக ஐபிஎல் லீக் சுற்றில் எட்டு வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் ஒரு அணி இருந்தால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்று சொல்லலாம்.

இது வரை அப்படித்தான் நடந்துள்ளது. சில சமயம் 14 அல்லது 12 புள்ளிகள் பெற்று இருந்தாலும் மற்ற அணிகளின் நெட் ரன் ரேட்டை வைத்து சில அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. ஆனால் 16 புள்ளிகள் இருந்தால் உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம்.

அந்த வகையில் பார்க்கும்போது சிஎஸ்கே அணிக்கு இன்னும் எட்டு போட்டிகள் மீதம் உள்ளன. அதில் ஏழு வெற்றிகளை பெற்றால் உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஒரு வேளை எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் மற்றும் புள்ளிகளை வைத்து சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆனால், நிச்சயமாக ஆறு அல்லது ஏழு வெற்றிகள் தேவை. இன்னும் எட்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் இனி சிஎஸ்கே அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையக் கூடாது. தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அந்த அணி தற்போது இருக்கும் நிலையில் அது சாத்தியமே இல்லை என்று அடித்துக் கூறலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல்வேறு பலவீனங்கள் உள்ளன. பவுலிங், பேட்டிங், அணி தேர்வு, கேப்டன்சி, அணியின் திட்டம், சொந்த மைதானமான சேப்பாக்கத்தை பயன்படுத்தும் விதம் என அனைத்துமே சொதப்பலாக உள்ளது. இதிலிருந்து அந்த அணி மீண்டு வரும் என யாராலும் சொல்ல முடியாது. அடுத்து உள்ள எட்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு அல்லது ஐந்து வெற்றிகளை பெற்றால் அது வியக்கத்தக்க விஷயமாகத்தான் இருக்கும்.

Story first published: Saturday, April 12, 2025, 12:30 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+