இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்!
டர்பன்:
20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ேமாதுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் இன்று நடக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இைதத் தொடர்ந்து இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
முதலில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.
அடுத்து பாகிஸ்தான் அணியுடன் மோதியது இந்தியா. இரு அணிகளும் சம அளவிலான ரன்களை எடுத்தன. புதிதாகக் கொண்டு வரப்பட்ட பெளல்-அவுட் முறையில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.
இதனால் சூப்பர்-8 போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. இதையடுத்து இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது.
போட்டியின் துவக்கத்தில் இருந்தே எந்த போட்டியிலும் தோல்வி அடையாத தென் ஆப்பிரிக்காவை வென்று, அந்த அணியை அரையிறுதி போட்டிக்கு நுழைய விடாமல் செய்து விட்டது இந்தியா.
இதனால் இன்றைய ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்திய அணி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துடனான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸ்ர்கள் அடித்து 12 பந்துகளில் அரை சதத்தை எட்டி உலகசாதனை படைத்த யுவராஜ்சிங் தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டார். இதனால் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலமிக்க ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடமும், சூப்பர்-8ல் பாகிஸ்தானிடமும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் டோணி கூறுகையில், ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி போட்டியில் இந்தியா கண்டிப்பாக வென்றாக வேண்டும். பந்து வீச்சாளர்கள் சிறிய தவறு செய்தாலும் அது எதிரணிக்கு சாதகமாகிவிடும்.
தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் 25 ரன்கள் எக்ஸ்ட்ரா கொடுத்தோம். இதை பெளலர்கள் கட்டுப்படுத்த வேண்டும். சேவக், காம்பீர், ரோஹித் சர்மா ஆகியோரின் பேட்டிங்கை அதிகம் நம்பி இருக்கிறோம். யுவராஜ் இடம்பெறும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார் என்றார்.
இன்றைய போட்டிகளை இஎஸ்பிஎன், ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன.


Click it and Unblock the Notifications