Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏய்.. இதுக்கு இன்னும் உயிர் இருக்குப்பா.. மனம் தளராத பங்காளிகள்.. பாகிஸ்தானுக்கு போன குட் நியூஸ்!

சென்னை: 2023 உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் இந்தியா ஓவர் டாமினேஷன் கொடுப்பதாக ஒரு பக்கம் பேச்சு இருந்தாலும் மற்ற இடங்களுக்கு கடுமையான போட்டி நடந்து வருகிறது.

இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் வீழ்த்தவே முடியாத அணியாக இந்திய அணி உருவெடுத்து உள்ளது.

 Can Pakistan still qualify to semi-final in the 2023 World Cup Cricket?

இதுவரை 8 போட்டிகளில் ஆடி உள்ள இந்திய அணி 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. 11 க்கு 11 போட்டிகளில் வெல்லும் தகுதியுடன் இந்திய அணி உள்ளது. இந்திய அணியை வீழ்த்த போகும் அந்த அணி எது என்பதே இந்த தொடரில் பெரிய கேள்வியாக உள்ளது. பேட்டிங்கில் எல்லாம் கவர் ஆகிவிட்டது. பவுலிங்கிலும் எல்லாம் கவர் ஆகிவிட்டது. இப்படி எல்லா பீல்டும் கவர் ஆகி உள்ளதால் கண்டிப்பாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

தொடர் வெற்றிகள்; 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. கடைசியாக இலங்கை, அதன்பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

செமி பைனல்: இந்திய அணி செமி பைனலுக்கு சென்றுவிட்டது. சம்பிரதாய முறைப்படி இந்திய அணி அடுத்த மேட்சில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வேண்டும். அதைத்தவிர இந்திய அணிக்கு இந்த லீக் ஆட்டங்களில் பெரிய போட்டி எதுவும் இல்லை. இது போக செமி பைனலுக்கு தென்னாப்பிரிக்கா அணியும் சென்றுவிட்டது.

இது போக நேற்று ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி செமி பைனலுக்குள் சென்றுவிட்டது. நேற்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்தது. இதில் இப்ராஹிம் சத்ரான் 129 ரன்களை இவர் 143 பந்துகளில் எடுத்தார். 8 பவுண்டரி 3 சிக்ஸ் அடித்தார். அதன்பின் கடைசியில் வந்த ரஷீத் கான் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 18 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை அதிர வைத்தார் .

இதன் மூலம் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 291-5 ரன்கள் எடுத்து. கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

மேக்ஸ்வெல் அதிரடி: இதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டாப் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். மேக்ஸ்வெல் மட்டும் கடைசிவரை நின்று ஆடிய 201 ரன்கள் எடுத்தார். 128 பந்தில் 21 பவுண்டரி , 10 சிக்ஸர் என்று இவர் ஆடிய ருத்ர தாண்டவம்தான் நேற்று ஆஸ்திரேலியா அணியை வெற்றிபெற வைத்தது.

உயிர் இருக்கு: இதனால் தற்போது எமி பைனலுக்கு செல்லும் அணிகளில் கடைசி இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் வாய்ப்பு முன்னர் 30 சதவிகிதத்திற்கும் கீழ் இருந்தது. அது தற்போது 40 சதவிகிதம் ஆகி உள்ளது. நியூசிலாந்து வாய்ப்பு 43 சதவிகிதம் ஆகி உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரில் இன்னும் உயிர் இருக்கிறது. ஆம்.. இனி நடக்கும் போட்டிகளில் பாகிஸ்தான் வரிசையாக அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று.. மீதம் உள்ள போட்டிகளில் நியூசிலாந்து தோல்வி அடைந்தால்.. பாகிஸ்தான் எளிதாக உள்ளே செல்ல முடியும். நான்காம் இடத்தை பிடிக்க ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் எந்த அணி செமிக்கு நுழையும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Wednesday, November 8, 2023, 10:26 [IST]
Other articles published on Nov 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+