Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 ஆண்டுகளுக்குப் பின்னராவது மும்பை வான்கடேவில் டெண்டுல்கர் சதமடிப்பாரா?

மும்பை: தமது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 16 ஆண்டுகாலத்துக்குப் பின் மும்பை வான்கடே மைதானத்தில் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் தமது 200வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகிறார். அந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறார்.

ஆனால் மும்பை வான்கடே மைதானத்தில் டெண்டுல்கர் சதமடித்தது 16 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது 1997ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 148 ரன்களைக் குவித்திருந்தார் டெண்டுல்கர்.

முதல் சதம்

முதல் சதம்

மும்பை வானக்டே மைதானத்தில் இதுவரை அவர் அடித்த முதல் மற்றும் கடைசி சதமாக இது இருக்கிறது. அதன் பிறகு மும்பையில் நடைபெற்ற போட்டிகளில் டெண்டுல்கர் சதமடிக்கவே இல்லை.

10 டெஸ்ட் போட்டிகள்..

10 டெஸ்ட் போட்டிகள்..

மும்பையில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மொத்தம் 847 ரன்கள்

மொத்தம் 847 ரன்கள்

10 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 847 ரன்களை டெண்டுல்கர் குவித்திருக்கிறார். இதில் சதம் ஒன்றுதான்.

7 அரை சதம்

7 அரை சதம்

மொத்தம் 7 அரை சதமடித்திருக்கும் டெண்டுல்கர், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

முதல் டெஸ்ட்டில்..

முதல் டெஸ்ட்டில்..

1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 78 ரன்களை எடுத்தார் டெண்டுல்கர்.

2வது போட்டியில்..

2வது போட்டியில்..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 34 மற்றும் 85 ரன்களை எடுத்தார் டெண்டுல்கர்.

3வது போட்டியில்...

3வது போட்டியில்...

1997ஆம் ஆண்டு 3வது டெஸ்ட்டில்தான் சச்சின் டெண்டுல்கர் தமது முதலாவது சதமடித்தார். இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 148 ரன்களையும் 2வது இன்னிங்சில் 13 ரன்களையும் எடுத்தார் அவர்.

3 ரன்களில் கோட்டைவிட்ட சதம்

3 ரன்களில் கோட்டைவிட்ட சதம்

2000ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 ரன்களில் சதத்தைக் கோட்டைவிட்டார் டெண்டுல்கர். முதல் இன்னிங்சில் 97 ரன்களையும் 2வது இன்னிங்சில் 8 ரன்களையும் அடித்தார்.

அடுத்த போட்டிகளில்...

அடுத்த போட்டிகளில்...

5வது போட்டியில் 76, 6வது போட்டியில் 35, 7வது போட்டியில் 5,55, 8வது போட்டியில் 1,34 என டெண்டுல்கரின் வேகம் குறைந்தே வந்தது.

6 ரன்களில் கோட்டை

6 ரன்களில் கோட்டை

2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 94 ரன்கள் எடுத்து 6 ரன்களில் சதத்தைக் கோட்டைவிட்டார் டெண்டுல்கர்.

கடந்த ஆண்டு..

கடந்த ஆண்டு..

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் மற்றும் 2வது இன்னிங்சில் தலா 8 ரன்களை மட்டுமே சோபிக்காமல் போனார் டெண்டுல்கர்..

கடைசி டெஸ்ட்டிலாவது..

கடைசி டெஸ்ட்டிலாவது..

இதனால்தான் தமது கடைசி டெஸ்ட்டிலாவது 16 ஆண்டுகளுக்குப் பின்னர் டெண்டுல்கர் சதமடிப்பாரா என்று ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கின்றனர்.

Story first published: Monday, October 14, 2013, 12:04 [IST]
Other articles published on Oct 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+