Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு 'டவுட்டு'... பிராட்மேன், சச்சின் ரெண்டு பேரும் ஒண்ணா...??!!

சென்னை: நாளை முதல் ஐந்து நாட்கள்தான் சச்சின் கிரிக்கெட் ஆடப் போகிறார்.. அவரைப் பற்றி அத்தனை பேருமே ஏதாவது ஒரு டாப்பிக்கை வைத்து சிலாகித்துப் பேசி வருகிறார்கள். நாமும் ஒரு டாப்பிக்கை எடுக்கலாமே என்றுதான் இந்த ஸ்டோரி...

இந்தியாவின் அற்புதமான வீரர்களில் ஒருவர் சச்சின் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. இந்தியாவுக்காக நீண்ட காலம் சளைக்காமல், அலுக்காமல் விளையாடிய ஒரே வீரர் இவர்தான்.

இந்தியாவுக்காக நிறைய ரன்களைச் சேர்த்த வீரரும் இவர்தான். இவர் படைக்காத சாதனைகளே இல்லை.. ஆனால் உலகப் புகழ் பெற்ற டான் பிராட்மேனுக்கு நிகரானவர் என்று பலரும், அவரை விட சிறந்தவர் என்று இன்னும் பலரும் புகழ்ந்தபோதுதான் கொஞ்சம் இடிக்கிறது...

எது இடிக்கிறது என்பதைப் பார்க்கலாமா....

பிராட்மேன் விளையாடியது..52 டெஸ்ட்

பிராட்மேன் விளையாடியது..52 டெஸ்ட்

ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் விளையாடிய காலம் மிக மிகக் குறுகியது. மொத்தமே 52 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடியுள்ளார்.

முதல் தரப் போட்டிகள் 234

முதல் தரப் போட்டிகள் 234

அதேபோல முதல் தரப் போட்டிகள் என்று பார்த்தால் 234 போட்டிகள்தான் ஆடியுள்ளார்.

எடுத்த ரன்கள் எத்தனை...?

எடுத்த ரன்கள் எத்தனை...?

டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் 6996 ஆகும். முதல் தரப் போட்டிகளில் 28,067 ரன்களை எடுத்திருந்தார்.

சதங்களின் நாயகன்

சதங்களின் நாயகன்

அதேபோல சதம் போடுவதிலும் அசத்தியவர் பிராட்மேன்தான். டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களைப் போட்டுள்ள இவர், முதல் தரப் போட்டிகளில் 117 சதங்களைப் போட்டு அந்தக் காலத்து பந்து வீச்சாளர்களை சத்தாய்த்தவர். அரை சதங்களைப் பொறுத்தவரை, டெஸ்ட்டில் 13ம், முதல் தரப் போட்டிகளில் 69ம் எடுத்துள்ளார்.

அதிகபட்ச ஸ்கோரிலும் டாப்தான்...!

அதிகபட்ச ஸ்கோரிலும் டாப்தான்...!

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ஆகும். முதல்தரப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 452 ரன்களை விளாசியுள்ளார். இது பிராட்மேன் கணக்கு.. அடுத்து இந்தியாவின் பிராட்மேன் கணக்குக்கு வருவோம்...

ம்ம்ம்... 200 டெஸ்ட்!

ம்ம்ம்... 200 டெஸ்ட்!

சச்சின் ஆடியது இதுவரை 199 டெஸ்ட் போட்டிகள். நாளைக்கு ஆடினால் அது அவரது 200வது டெஸ்ட். ஒரு நாள் போட்டிக் கணக்கு 463. முதல் தரப் போட்டிகள் கணக்கு 308. லிஸ்ட் ஏ போட்டிகள் கணக்கு 551.

எக்கச்சக்க ரன்கள்...

எக்கச்சக்க ரன்கள்...

டெஸ்ட் போட்டிகளில் சச்சின் குவித்த ரன்கள் 15,847. ஒரு நாள் போட்டிகளில் 18,426. முதல் தரப் போட்டிகளில் 25,312. லிஸ்ட் ஏ போட்டிகளில் 21,999... எல்லாமே ஆயிரக்கணக்கில்தான்.

சதம் நிறைய இருக்கு...

சதம் நிறைய இருக்கு...

சச்சின் சதங்களையும் நிறையவே போட்டுள்ளார். டெஸ்ட்களில் 51, ஒரு நாள் போட்டிகளில் 49, முதல் தரப் போட்டிகளில் 81, லிஸ்ட் ஏ போட்டிகளில் 60 என குவித்து விட்டார்... அடித்து.

உயர்ந்தபட்ச ரன் எதுவோ...!

உயர்ந்தபட்ச ரன் எதுவோ...!

டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் உயர்ந்தபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 248. ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200. முதல் தரப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 248. லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 200... இது பாராட்டுக்குரியதுதான்.

ஆல் ரவுண்டரும் கூட..

ஆல் ரவுண்டரும் கூட..

பந்து வீச்சிலும் ஜொலித்தவர்தான் சச்சின். டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 154 விக்கெட்களையும், முதல் தரப் போட்டிகளில் 70 விக்கெட்களையும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 201 விக்கெட்களையும் சாய்த்து அசத்தியுள்ளார்.

பிராட்மேன் சராசரி... வாவ்!

பிராட்மேன் சராசரி... வாவ்!

பிராட்மேனின் பேட்டிங் சராசரியைப் பார்த்தால் பயந்து வருகிறது.. டெஸ்ட்டில் 99.94 என்ற சராசரியை வைத்திருந்தார். அதேபோல முதல் தரப் போட்டிகளில் அவரது சராசரி 95.14 ஆகும். உலகின் எந்த ஒரு வீரரிடமும் இப்படி மலைக்க வைக்கும் அலேக் சராசரி இருந்ததாக நினைவில்லை.

சச்சின் சராசரி ... அவ்வ்வ்!

சச்சின் சராசரி ... அவ்வ்வ்!

ஆனால் சச்சினின் சராசரி எந்த வகையான போட்டியிலுமே 60ஐத் தாண்டியதில்லை. டெஸ்ட் போட்டிகளில் 53.71 மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் 44.83தான். முதல் தரப் போட்டிகளில் 57.92 மட்டுமே. லிஸ்ட் ஏ போட்டிகளில் 45.54 வைத்துள்ளார்.

பிராட்மேன் விளையாடியது...20 வருஷம்

பிராட்மேன் விளையாடியது...20 வருஷம்

பிராட்மேன் 20 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் விளையாடிய போட்டிகள் 52 மட்டுமே. ஆனாலும் கிட்டத்தட்ட 100 சதவீத சராசரியை அவர் வைத்துள்ளார்.

சச்சின் 24 வருஷம்

சச்சின் 24 வருஷம்

சச்சின் கடந்த 24 வருடங்களாக கிரிக்கெட் ஆடி வருகிறார். பிராட்மேனை விட நான்கு ஆண்டுகள் கூடுதலாகவே ஆடியுள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளையும் கண்டு விட்டார். ஆனாலும் அவரது சராசரி 60ஐக் கூட தாண்டவில்லை. இது ஆச்சரியம்தானே....

ஒருவேளை பிராட்மேன் மும்பையில் பிறந்திருந்தால்??

ஒருவேளை பிராட்மேன் மும்பையில் பிறந்திருந்தால்??

ஒரு வேளை பிராட்மேன் இந்தியாவில், அதிலும் மும்பையில் பிறந்திருந்தால், சச்சின் போலவே அவருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால்... அவர் அடித்த ரன் அடிக்கு, இன்னும் பல மில்லனியத்திற்கு யாரும் பக்கத்தில் கூட நெருங்க முடியாத அளவுக்கு லட்சக்கணக்கில் அவர் ரன்கள் குவித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

ரொம்ப காலத்திற்கு விளையாடிய வகையில் சச்சினை 'பிராட்' மேன் என்று சொல்லலாம்.. ஆனால் விளையாடிய விதத்தைப் பார்ததால்.. பிராட்மேன்தான் உண்மையான 'சச்சின்'.....!

Story first published: Wednesday, November 13, 2013, 11:51 [IST]
Other articles published on Nov 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+