For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அசாதாரண வீரர்.. அந்த ஸ்டைல் இருக்கே.. அதிக ரிஸ்க்" சூர்யகுமார் யாதவை பிரமிக்கும் நியூசி. வீரர்!

சென்னை: வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்து வரும் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் பிரமிப்பை அளிப்பதாக நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சென்சேஷன் சூர்யகுமார் யாதவ் தான். ஒவ்வொரு போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தி வரும் திறமை, ரசிகர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் இந்நாள் வீரர்களையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அதிலும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5வது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளை அசால்ட்டாக ஃபைன் லெக், ஸ்கொயர் லெக் திசையில் அடிக்கப்பட்ட சிக்சர்களை கண்டு உலகமே பிரமித்து போனது.

கனவில் கூட நினைத்ததில்லை

கனவில் கூட நினைத்ததில்லை

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை முக்கியமான நேரங்களில் காப்பாற்றிய கிளென் பிலிப்ஸ், சூர்யகுமார் யாதவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்து பிலிப்ஸ் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் அசாத்தியமான கிரிக்கெட் வீரர். அவரை போன்று கிரிக்கெட் ஷாட்களை விளையாடுவது பற்றி கனவில் கூட சிந்தித்ததில்லை.

சூர்யகுமாரின் அதிக ரிஸ்க்

சூர்யகுமாரின் அதிக ரிஸ்க்

அவரின் மணிக்கட்டை பயன்படுத்தி சிக்சர்களை விளாசிவது என்பது சாதாரணமாக பார்க்க கூடியதோ, விளையாடக் கூடியதோ அல்ல. சூர்யகுமார் யாதவ் போன்ற விளையாடுவது அதிக ரிக்ஸ்களை எடுக்கக் கூடியது. அதற்கான பலன் அவருக்கு கிடைத்து வருகிறது. சில நேரங்களில் அவரது ஷாட்கள் எடுபடவில்லை என்றால், நிச்சயம் ஆட்டமிழந்து வெளியேற வேண்டிய நிலை வரும். மிடில் ஆர்டரில் நான் எனது ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன்.

ஸ்ட்ரைக் ரேட் பற்றி பிலிப்ஸ்

ஸ்ட்ரைக் ரேட் பற்றி பிலிப்ஸ்

எங்களது வேலைகளை வெவ்வேறு வகையில் செய்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடக்கவில்லை என்றால், அவரின் ஸ்ட்ரைக் ரேட் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். ஏனென்றால் மற்ற நாட்டு மைதானங்களை ஒப்பிட்டால், ஆஸ்திரேலிய மைதானங்களின் நீளம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரியின் பேச்சு

ரவி சாஸ்திரியின் பேச்சு

நடப்பாண்டில் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 1040 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் 43 சராசரியுடன், 186 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அந்த ரன்களை குவித்துள்ள பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் சூர்யகுமார் யாதவை அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 19, 2022, 18:47 [IST]
Other articles published on Nov 19, 2022
English summary
Glenn Phillips of the New Zealand team praised the performance of Suryakumar Yadav, who is creating various achievements for the Indian team in white ball cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+