நியூசிலாந்து போன்ற நல்ல டீமை பழிவாங்க நினைக்கவில்லை - விராட் கோலி
ஆக்லாந்து : நியூசிலாந்து போன்ற நல்ல அணியை பழிவாங்கும் நோக்கமில்லை என்று அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நாளை துவங்கவுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, கடந்த உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறித்து மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

முதல் டி20 போட்டி நாளை துவக்கம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஏறக்குறைய 6 வாரங்கள் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் நாளை துவங்கவுள்ளது.

இந்தியாவை தெறிக்க விட்ட நியூசிலாந்து
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியினர், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

விராட் கோலி திட்டவட்டம்
இந்நிலையில் இந்தியாவின் உலக கோப்பை கனவை முறியடித்த நியூசிலாந்தை பழிவாங்கும்வகையில் இந்தியாவின் ஆட்டம் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, அத்தகைய எண்ணமில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

விராட் கோலி பாராட்டு
நியூசிலாந்து போன்ற நல்ல அணியை பழிவாங்கும் நோக்கம் ஏற்படவில்லை என்று விராட் கோலி தெரிவித்தார். இந்த தொடரில் நியூசிலாந்துடன் போட்டி மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டி20 உலக கோப்பை தொடர்
வரும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு டி20 போட்டியும் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ள கோலி, அதனால் அணி வீரர்கள் கவனமுடன் டி20 போட்டிகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications