
யூஏஇ பயணம் மேற்கொண்ட சிஎஸ்கே
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல் 2020 சீசனில் பங்கேற்கும் வகையில் கடந்த வாரத்தில் யூஏஇக்கு பயணம் மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் தற்போது குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயினும் ஹோட்டல் அறைகளிலேயே சில வீரர்கள் தங்களது பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துபாயில் சிஎஸ்கே கேப்டன்
கடந்த 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ரிடையர்மெண்ட்டை அறிவித்துள்ள முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும்வகையில் துபாய் சென்றுள்ளார். தோனியும் பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தன்னுடைய அணி வீரர்களுடன் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ரசிகர்கள் ஆர்வம்
ஐபிஎல் சீசனில் இந்த முறை சிஎஸ்கே தனது 4வது கோப்பையை வெல்லும் என்று சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்தப் போட்டிகளை டிவியில் மட்டுமே பார்க்க முடியும் என்பதாலும், யூஏஇயில் போட்டிகள் நடைபெறவுள்ளதாலும், ஐபிஎல்லின் உண்மையான உற்சாகம் சிறிது மட்டுப்படும் என்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், 5 மாதங்களாக போட்டிகள் இல்லாதநிலையில் ஐபிஎல் நடைபெறுவது கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படம் வெளியிட்ட சிஎஸ்கே
இந்நிலையில் கைகளில் கிட்டுடனும் முகத்தில் உற்சாக சிரிப்புடனும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியை படம்பிடித்த அந்த அணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் காணப்படும் எம்எஸ் தோனியின் இந்த சிரிப்பை பார்ப்பதற்கு காத்திருக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications