
டி20 அணி அறிவிப்பு
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இறுதி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரும் அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி துவங்கி இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்திய அணி அறிவிப்பு
இந்நிலையில் இதற்கான இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக இந்த போட்டிகள் கருதப்படும் நிலையில் புது முகங்களுக்கு இந்த தொடரில் வாய்ப்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் ஹரியானா அணி மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள ராகுல் டிவாட்டியாவும் ஒருவர்.

ராகுல் டிவாட்டியா மகிழ்ச்சி
இந்நிலையில் இதுகுறித்து மகிழ்சசி தெரிவித்துள்ள ராகுல் டிவாட்டியா, ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் விராட் கோலிக்கு எதிராக தான் விளையாடியுள்ளதாகவும் தற்போது அவருடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடவுள்ளது மிகுந்த த்ரில்லாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காத்திருப்பதாக டிவாட்டியா மகிழ்ச்சி
விராட் கோலி மற்றும் சர்வதேச அளவில் முக்கிய வீரர்களாக விளங்கும் இந்திய வீரர்களுடன் இணைந்து விளையாட காத்திருப்பதாகவும் அவர்கள் அனைவரும் மிகச்சிறந்த அணிகளுக்கு எதிராக எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பது குறித்து அறிய ஆவலுடன் உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications