Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பிரையன் லாராவின் 400 ரன் சாதனைக்கு குறி வைக்கப் போகிறார்”.. வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்கள் பில்டப்

மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜாம்பவான் பிரையன் லாராவின் 400 ரன்கள் என்ற இமாலய சாதனையை முறியடிப்பார் என்ற விவாதம் இப்போதே தொடங்கி விட்டது. அது சாத்தியம் தானா? வைபவ் சூர்யவன்ஷி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காத நிலையில் எப்படி இது சாத்தியம் என்று பார்க்கலாம்.

வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தற்போது இவருக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

Can Vaibhav Suryavanshi break Brian Lara s 22-Year-Old historic 400-Run test record

விரைவில் தொடங்க உள்ள துலீப் டிராபி தொடரில் வைபவ் சூர்யவன்ஷி விளையாட உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வடிவில் நடக்கும் இந்த தொடரில் அவர் தனது திறமையை நிரூபிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்திய டெஸ்ட் அணியில் ஆட வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வைபவ் விளையாடும் பட்சத்தில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் வரலாற்று சாதனையை அவர் முறியடிப்பார் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத பிரையன் லாராவின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தனது இலக்காக வைத்து விளையாடுவார் என்கிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரையன் லாரா 582 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தார். அவரது அந்த இன்னிங்ஸில் 43 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். லாராவின் இந்த அதிரடி ஆட்டத்தின் உதவியால் வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த இன்னிங்ஸில் 751 ரன்களை குவித்தது.

இந்த இமாலய சாதனையை முறியடிக்க இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் செவாக் பலமுறை முயற்சி செய்தும் அவரால் முறியடிக்க முடியவில்லை. சேவாக் இரண்டு முச்சதங்கள் மட்டுமே அடித்தார். தற்போது வரை வைபவ் விளையாடும் ஒவ்வொரு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் ஏதாவது ஒரு சாதனையை படைத்து வருகிறார். இதனால், வைபவ் சூர்யவன்ஷியிடம் அதிரடியான ஆட்டமும், பொறுமையும் இணைந்து இருப்பதால் லாராவின் சாதனையை முறியடிக்க அவரிடம் திறமை உள்ளதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனக்கா இடமில்லை? பழிவாங்கும் முகமது ஷமி.. உலகக்கோப்பையில் இந்தியா தோற்றால் அஜித் அகர்கர் காலி

எனக்கா இடமில்லை? பழிவாங்கும் முகமது ஷமி.. உலகக்கோப்பையில் இந்தியா தோற்றால் அஜித் அகர்கர் காலி

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது எளிதானது அல்ல. அங்கு ஒரு வீரரின் பொறுமையும் நிதானமுமே சோதிக்கப்படும். வைபவ் சூர்யவன்ஷி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று சில சதங்களை அடித்தால் மட்டுமே அவரால் லாராவின் 400 ரன் சாதனையை நெருங்க முடியுமா? இல்லையா? என கணிக்க முடியும்.

Story first published: Monday, August 10, 2026, 15:32 [IST]
Other articles published on Aug 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+