Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனையை உடைப்பாரா கோலி..? 100 டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார்?

மொஹாலி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நாளை தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

இந்த நிலையில், விராட் கோலியால் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடிக்க முடியுமா என்பதை தற்போது காணலாம்.

அதே போன்று 100வது டெஸ்ட் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்பதையும் தற்போது பார்க்கலாம்.

பாதி கிணறு

பாதி கிணறு

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சிச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டில் விளையாடி 15921 ரன்கள் அடித்துள்ளார். இதில் 51 சதங்கள் அடங்கும். தற்போது அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 32வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 99 டெஸ்டில் 7962 ரன்கள் அடித்துள்ளார். அதாவது கோலி தற்போது 33 வயதில் பாதி கிணறு மட்டுமே தாண்டியுள்ளார்.

சச்சினை முந்த முடியுமா?

சச்சினை முந்த முடியுமா?

சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் அவர் 7959 ரன்கள் அடிக்க வேண்டும். அதாவது, இதுவரை விளையாடி ரன்கள் சேர்த்தது போல் மீண்டும் அதை விட அதிக ரன்கள் அடித்தால் தான் சச்சினின் சாதனையை கோலியால் முறியடிக்க வேண்டும். கோலி அதிகபட்சம் இன்னும் 6 வருடங்கள் விளையாடினால் கூட இன்னும் 60 டெஸ்ட் தான் விளையாட முடியும். இதில் அதிகபட்சமாக 6 ஆயிரம் ரன்கள் அடித்தால் கூட சச்சினின் சாதனையை முறியடிக்க முடியாது.

100 டெஸ்ட் முடிவில் சச்சின்

100 டெஸ்ட் முடிவில் சச்சின்

சச்சின் தனது 100வது டெஸ்ட் முடிவில் 8405 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் அவர் 29 வயதிலேயே 100 டெஸ்டில் விளையாடிவிட்டார். இதனால் கோலியால் சச்சினின் டெஸ்ட் ரெக்கார்டுக்கு ஆபத்து இல்லை. இதே போன்று 100 முடிவில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 18 வது இடத்தில் உள்ளார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

100 டெஸ்ட் முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரைன் லாரா 8916 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். சங்கக்காரா 8651 ரன்கள் அடித்துள்ளார். யூனிஸ் கான் 8640 ரன்களும், ராகுல் டிராவிட் 8553 ரன்களும் அடித்துள்ளார். கவாஸ்கர் 8479 ரன்களும், சச்சின் 8405 ரன்களும், பாண்டிங் 8253 ரன்களும் அடித்துள்ளனர். கோலி ஒரு முச்சதம் அடித்தால் மட்டுமே இவர்களை முந்த முடியும்.

Story first published: Thursday, March 3, 2022, 19:47 [IST]
Other articles published on Mar 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+