For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CAN vs NZ: டி20 உலககோப்பையில் புதிய சாதனை.. கனடா வீரர் 19 வயது யுவ்ராஜ் சம்ரா சாதனை சதம்

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், கனடாவின் 19 வயதான யுவராஜ் சம்ரா, நியூசிலாந்து அணிக்கு எதிராக வரலாற்றுச் சதம் அடித்தார். இதன் மூலம், ஒரு அசோசியேட் (நாட்டில் இருந்து டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து பந்துவீச்சை யுவராஜ் துணிச்சலுடன் எதிர்கொண்டார். கேப்டன் தில்ப்ரீத் பஜ்வாவுடன் (36 ரன்கள்) இணைந்து 116 ரன்கள் குவித்ததுடன், டி20 உலகக் கோப்பையில் கனடாவுக்கான முதல் சதத்தையும் பதிவு செய்தார். இது அவருடைய முதல் டி20 சர்வதேச சதமாகும்.

19 ஆண்டுகள் 141 நாட்களில் இச்சதத்தை விளாசிய யுவராஜ், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த மிக இளம் வீரரானார். வங்கதேச வீரர் ஜுனைத் சித்திக்கின் 19 ஆண்டுகள் 325 நாட்களில் 2007ஆம் ஆண்டு டி20 எலககோப்பையில் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே இளம் வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.அதனை தற்போது யுவராஜ் முறியடித்தார்.

டி20 உலகக் கோப்பையில் இளம் வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் யுவராஜ் சம்ரா (கனடா - 19 ஆண்டுகள், 141 நாட்கள், 2026) முதலிடத்திலும்,, அஹமது ஷெஹ்சாத் (பாகிஸ்தான் – 22 ஆண்டுகள், 127 நாட்கள், 2014) 2வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா (இந்தியா – 23 ஆண்டுகள், 156 நாட்கள், 2010) 3வது இடத்திலும், , அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து – 25 ஆண்டுகள், 83 நாட்கள், 2014) 4வது இடத்திலும் மற்றும் க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து – 25 ஆண்டுகள், 327 நாட்கள், 2022) 5வது இடத்தையும் பிடித்தனர்.

கேப்டன் தில்ப்ரீத் பஜ்வாவின் 36 ரன்கள் இன்னிங்ஸ் மூலம் யுவராஜ் சுதந்திரமாக ஆட உதவியது. இவர்களது 116 ரன்கள் தொடக்க ஜோடி, அசோசியேட் அணிகளுக்கான டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நான்காவது பெரிய 100+ ரன் பார்ட்னர்ஷிப்பாகும். ஓமானின் இலியாஸ் & ஜட்டீந்தர் (131* ரன்கள், 2021), ஸ்காட்லாந்தின் ஜோன்ஸ் & முன்சி (126 ரன்கள், 2026), இத்தாலியின் மாஸ்கா & மாஸ்கா (124* ரன்கள், 2026) ஆகிய ஜோடிகள் மட்டுமே இவரை விட அதிக ரன்களைக் குவித்துள்ளன.

ஜேக்கப் டஃப்பியால் அவுட் செய்யப்பட்டு யுவராஜ் சம்ரா வெளயேறியபோது, அவரது சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டி நியூசிலாந்து வீரர்களே கைதட்டினர். இந்த இளம் வீரரின் வரலாற்றுச் சாதனை, உலகக் கிரிக்கெட் அரங்கில் சிறிய நாடுகளும் வளர்ந்த வருவதை காட்டுவதாக ரசிகர்கள் பாராட்யுள்ளனர். இதன் மூலம் கனடா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Tuesday, February 17, 2026, 13:07 [IST]
Other articles published on Feb 17, 2026
English summary
In the 2026 T20 World Cup, Yuvaraj Samra became the youngest to score a century for an associate nation, sharing a 116-run opening stand with Tilpreet Bajwa and guiding Canada to a notable performance.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+