Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? வெ.இ உடனான 2வது டி20 போட்டி.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

குயானா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கவுள்ளது. இதற்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

Can Yashasvi Jaiswal get a chance to Debut in the 2nd T20 Against West Indies in Guyana

தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் விராட் கோலி, ரோகித் சர்மா, சிராஜ் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியை பொறுத்தவரை டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் நீண்ட பேட்டிங் வரிசையை இந்திய அணி விரும்பும் என்று பார்க்கப்படுகிறது.

இதனால் பிளேயிங் லெவனில் பெரியளவில் மாற்றங்கள் செய்ய ஹர்திக் பாண்டியா விரும்ப மாட்டார் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் சுப்மன் கில் - இஷான் கிஷன் தான் தொடக்கம் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன்கள் தொடக்கம் என்பதால், எந்த வீரர் முதலில் ஆட்டமிழக்கிறாரோ, அதனை பொறுத்தே திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங் வரிசை அமையும்.

அதேபோல் கடந்த போட்டியில் 6வது இடத்தில் சஞ்சு சாம்சன், இம்முறை 5வது இடத்தில் களமிறக்கப்படுவார். இதனால் 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், 7வது இடத்தில் அக்சர் படேலும் களமிறங்குவார்கள். ஆசியக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் சுழல் கூட்டணியான சாஹல் - குல்தீப் இருவரும் களமிறங்குவார்கள்.

அதன்பின் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை அமெரிக்காவில் நடக்கவுள்ள கடைசி 2 டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் சில போட்டிகள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 அறிமுகத்திற்காக காத்திருக்க வேண்டும்.

Story first published: Sunday, August 6, 2023, 8:12 [IST]
Other articles published on Aug 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+