Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதையே பேச முடியலையேம்மா.. அங்க வந்து எப்படி.. மனைவியைக் கலாய்த்த தோனி!

ராஞ்சி : கிரிக்கெட்டாக இருந்தாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் இரண்டையும் கூலாக கையாண்டு வருபவர் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தோனி, தனது மனைவியை வம்பிழுக்கும் வீடியோவை அதில் தற்போது பதிவிட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். விளம்பரம் ஒன்றிற்கான ரிகர்சலில் டயலாக்கை மனப்பாடம் செய்வதற்கு சாக்ஷி தடுமாறுவதும், அதை வைத்து தோனி அவரை கலாய்ப்பதுமாக வீடியோ செல்கிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள எம்.எஸ். தோனி, ஐபிஎல் விளையாடிவிட்டு, அதன் பின்பு தன்னுடைய விளையாட்டு குறித்து நல்ல முடிவை எடுப்பார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 தொடர் வீடியோக்கள்

தொடர் வீடியோக்கள்

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளால் கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை திறம்பட நடத்தி வருபவர். அவர் அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

 மனைவியை வம்பிழுத்த தோனி

மனைவியை வம்பிழுத்த தோனி

இந்நிலையில் தன்னுடைய மனைவி சாக்ஷியை, தோனி வம்பிழுக்கும் வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தடுமாறிய சாக்ஷி

தடுமாறிய சாக்ஷி

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சாக்ஷி விளம்பரம் ஒன்றிற்காக டயலாக்கை மனப்பாடம் செய்வதும், அதில் அவர் தடுமாறுவதுமாக காணப்படுகிறது.

"எப்படி பேசப் போற?"

ஒரு பேப்பரில் காணப்படும் டயலாக்கை சாக்ஷி ரிகர்சல் செய்து கொண்டிருக்க, பேப்பரில் உள்ளதையே சரியாக பேச முடியவில்லை. எப்படி டேக்கில் பேசப் போற என்று தோனி கலாய்த்துள்ளார்.

தோனி பதிவு

மேலும் அது ஈசியான டயலாக் தான் என்று சாக்ஷி கூற, அவர் அதை ஒரே டேக்கில் பேசிவிடுவார் என்றும் தோனி கலாய்த்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ அது என்று குறிப்பிட்டுள்ள தோனி, நேரம் பறக்கிறது என்றும் கூறியுள்ளார்.

 தோனி குறித்து ரவி சாஸ்திரி

தோனி குறித்து ரவி சாஸ்திரி

சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக விலகியுள்ள தோனி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டு, அதன்பின்பு தான், இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து முடிவெடுப்பார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 17, 2019, 12:36 [IST]
Other articles published on Dec 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+