Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தில் அந்த ஒரு சிறு மாற்றம்.. இந்தியாவின் பக்கம் ஆட்டம் வந்தது எப்படி.. கே.எல்.ராகுல் விளக்கம்!

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் எப்படி வெற்றி பெற போகிறோம் என ஓய்வறையே பெரும் டென்ஷனில் இருந்ததாக கேப்டன் கே.எல்.ராகுல் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெறி பெற்றது. மேலும் 2 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 2 இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தமாகவே 145 ரன்களை தான் இலக்காக நிர்ணயித்தது.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

ஆனால் இந்த எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியை சுலபமாக வெற்றி பெற விடவில்லை வங்கதேச பவுலர்கள். ஓப்பனிங் வீரர்கள் (7) கேப்டன் கே.எல்.ராகுல் (2) என அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதன்பின்னர் வந்த புஜாரா (6), விராட் கோலி (1) என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதிரடி நாயகன் ரிஷப் பண்ட்-ம் வெறும் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால் இந்தியா ஒருகட்டத்தில் தோற்றுவிடும் என்ற அச்சம் எழுந்தது.

காப்பாற்றிய அஸ்வின்

காப்பாற்றிய அஸ்வின்

எனினும் அப்போது ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றிக்கொண்டு வந்தனர். இந்தியாவுக்கு இன்னும் 71 ரன்கள் தேவை, ஆனால் 3 விக்கெட்கள் தான் உள்ளது என்ற போது இருவரும் அந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துக்கொடுத்தனர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் 29 ரன்களும், அஸ்வின் 42 ரன்களும் அடித்தனர்.

 கேப்டன் ராகுல் விளக்கம்

கேப்டன் ராகுல் விளக்கம்

இந்நிலையில் இக்கட்டான சூழலில் இந்தியா எப்படி இருந்தது என்பது குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் பேசியுள்ளார். அதில், இதுபோன்ற சூழல்களில் மிடில் ஆர்டரில் உள்ள வீரர்களை தான் நம்ப வேண்டும். இதே போல நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம், ஒருவர் காப்பாற்றியும் கொடுத்துள்ளார். எனினும் அதற்காக டென்ஷன் இல்லையென கூற மாட்டேன். உண்மையாகவே ஓய்வறை மிகவும் பரபரப்பாக இருந்தது.

எப்படி சமாளித்தது

எப்படி சமாளித்தது

இது பேட்டிங்கிற்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2 இன்னிங்ஸ்களிலும் கடும் அழுத்தங்களை வங்கதேசம் கொடுத்தனர். புதிய பந்துகளில் இங்கு விளையாடவே முடியாது. பந்து நைசாக மாறினால் பின்னர் ஒரு அளவிற்கு பேட்டிங் செய்யலாம். எனவே புதிய பந்தை யார் ஆடுகிறார் என்பதுதான் இங்கு பிரச்சினையே. அதனால் தான் முதலில் சில விக்கெட்களை இழந்தோம். எனினும் பின்னர் பந்து சாஃப்ட் ஆன உடன் நாங்கள் பணியை முடித்தோம் என கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

Story first published: Sunday, December 25, 2022, 13:33 [IST]
Other articles published on Dec 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+