Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு ஒன்னு பத்தாது, ரெண்டு வேணும்..!! கோலியின் ஆசைக்கு ஓகே சொன்ன மாயங்.!!.

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, முதல் டெஸ்டில் செஞ்சூரி அடித்த ஸ்ரேயாஸ் 18 ரன்களே அடித்தார்

இதனால், அனைத்து பொறுப்புமே தொடக்க வீரர் மாயங் அகர்வால் மீது வந்தது.ஆனால் மாயங் அகர்வால் சதம் விளாசியே 2 ஆண்டுகள் ஆனது

4வது சதம்

4வது சதம்

இருப்பினும் மாயங் அகர்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நல்ல பந்தை தொடாமல் விட்டும், மோசமான பந்தை அடித்து ஆடியும் மாயங் அகர்வால் ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் ,மறு பக்கம் பொறுப்பாக விளையாடிய அகர்வால் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4வது சதத்தை விளாசினார்

கோலியின் ஆசை

கோலியின் ஆசை

மாயங் சதம் விளாசிய போது, பெவிலியனில் இருந்த விராட் கோலி, எனக்கு இரட்டை சதம் வேண்டும் என்று இரட்டை விரலை உயர்த்தி காட்டினார். இதனை புரிந்து கொண்ட மாயங் அகர்வால் ஓ.கே. கேப்டன் என்று கட்டை விரலை உயர்த்தினார்

வரலாறு

வரலாறு

ஒரு நல்ல டெஸ்ட் வீரர் முதலில் அதிக பந்துகளை பிடித்து தன்னை ஆடுகளத்தில் நிலை நிறுத்தி கொள்வார். பிறகு சதத்தை நோக்கி பயணிப்பார், பின் அந்த சதத்தை பெரிய ஸ்கோராக மாற்றுவார். இதே போல் தான் மாயங் அகர்வால் இதற்கு முன்பு அடித்த 3 சதத்தை, இரண்டு இரட்டை சதமாக மாற்றியுள்ளார்.

Recommended Video

BCCI- Indian Players இடையே வாக்குவாதம்? SA Tour பிரச்னை! | OneIndia Tamil
அஸ்வின் அவுட்

அஸ்வின் அவுட்

2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய போதும் சாஹா, அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அகர்வால் தனி ஆளாக நின்று போராடி வருகிறார். இதில் மாயங் அகர்வால் இரட்டை சதம் விளாசினால், கே.எல். ராகுலின் இடத்திற்கே ஆபத்து வந்துவிடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

Story first published: Saturday, December 4, 2021, 13:09 [IST]
Other articles published on Dec 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+