Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 பெரிய தவறுகள்.. மகா மோசமாக சொதப்பிய "கேப்டன்" கோலி.. காட்டிக்கொடுத்த விமர்சகர்கள்.. பின்னணி!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி எடுத்த 5 முக்கிய முடிவுகள் பெரிய விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் அதிரடியாக ஆடி உள்ளது. இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய பவுலர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் போட்டு பொளந்து வந்தனர். இங்கிலாந்து விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வந்தனர்.

ஸ்பின்

ஸ்பின்

ஆஸ்திரேலியாவின் வலிமையான பேட்ஸ்மேன்களை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய பவுலர்கள் இன்று சென்னை பிட்சில் இங்கிலாந்து அணியிடம் மிக மோசமாக சொதப்பினார்கள். ரஹானே பாணியில் 5 பவுலர்கள் உடன் கோலி இன்று இறங்கினாலும் இந்திய அணி மோசமாக சொதப்பியது. பெரிதும் எதிர்பார்த்த ஸ்பின் பவுலிங் இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய அணியின் கேப்டன் கோலி செய்த 5 முக்கியமான தவறுகள்தான் இந்திய அணி இன்று சொதப்ப முக்கிய காரணம் என்கிறார்கள். கோலி செய்த தவறுகளை கிரிக்கெட் விமர்சகர்கள் பட்டியலிட்டு உள்ளனர். இந்திய அணியில் இன்று அனுபவம் வாய்ந்த குல்தீப் யாதாவிற்கு பதிலாக சபாஷ் நதீமை எடுத்தது முதல் தவறாக பார்க்கப்படுகிறது.

தவறு

தவறு

இவர் இன்று இந்திய அணிக்காக கொஞ்சம் கூட சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. இவர் அதிக அளவு ரன் கொடுத்ததுதான் மிச்சம். இவரின் தேர்வு முதல் தவறாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இந்திய அணியின் இளம் வீரர் வாஷிங்க்டன் சுந்தருக்கு மிக தாமதமாக ஓவர் கொடுத்தார் கோலி. 41 ஓவரைத்தான் சுந்தர் வீசினார்.

கோலி ஓவர்

கோலி ஓவர்

சுந்தருக்கு கடைசி வரை ஓவர் கொடுக்காமல் 40 ஓவருக்கு பின் கொடுத்தது சர்ச்சையானது. அதேபோல் மூன்றாவது தவறாக ஒரே நேரத்தில் சுந்தர், நதீம் ஆகிய அனுபவம் இல்லாத வீரர்களை மாற்றி மாற்றி கோலி பவுலிங் செய்ய வைத்தார். இதை பயன்படுத்தி இங்கிலாந்தின் ரூட் - சிப்லி அதிரடியாக ஆடினார்கள். கோலியின் இந்த பவுலிங் ரொட்டேஷன் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

நான்காவது தவறு

நான்காவது தவறு

அடுத்ததாக கோலி செய்த பீல்டிங் செட்டப் மிக மோசமாக இருந்தது. ரூட் ஸ்வீப் ஷாட் அடிக்கிறார் என்று தெரிந்தும் அதற்கு ஏற்றபடி பீல்டிங் செட் செய்யாமல் கோலி சொதப்பினார். கடைசியாக கோலி புதிய பந்தை எடுப்பதிலும் தவறு செய்தார். புதிய பந்தை சீக்கிரம் எடுக்காமல் 4 ஓவர் தாமதமாக எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

புதிய பந்து எடுத்த பின்தான் பும்ரா விக்கெட் எடுத்தார். புதிய பந்தை கொஞ்சம் முன்பே எடுத்து இருந்தால் இன்று இன்னொரு விக்கெட் கூடுதல் விழுந்து இருக்கும். ஆனால் கோலி பந்தை தாமதமாக எடுத்த காரணத்தால் விக்கெட் கடைசி பந்தில்தான் விழுந்தது. கோலியின் இந்த முடிவும் தவறானதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, February 6, 2021, 0:03 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+