Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நாள் போட்டிகளில் "பெஸ்ட் தல" டோணிதான்.. அஸாருதீன் அவுட்!

பிர்மிங்காம்: ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்ற பெயரையும், பெருமையையும், சாதனையையும் மகேந்திர சிங் டோணி கைப்பற்றியுள்ளார்.

இதுநாள் வரை இந்த விஷயத்தில் அஸாருதீனையும், கங்குலியையும் மட்டுமே நமது ரசிகர்கள் மாறி மாறி வேடிக்கை பார்த்து வந்த நிலை மாறி டோணிதான் இதுவரை இருந்த கேப்டன்களிலேயே பெஸ்ட் என்ற பெயரைப் பெற்று விட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற அபாரமான வெற்றியின் மூலம் இந்த புதிய சாதனையைப் படைத்தார் டோணி.

91 வெற்றிகள்... கேப்டனாக

91 வெற்றிகள்... கேப்டனாக

4வது ஒரு நாள் போட்டியில் கிடைத்த வெற்றி, கேப்டனாக டோணிக்குக் கிடைத்த 91வது வெற்றியாகும்.

அஸாருதீனை மிஞ்சினார்

அஸாருதீனை மிஞ்சினார்

3வது போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் அஸாருதீன் அதுவரை படைத்து வைத்திருந்த 90 வெற்றிகள் என்ற சாதனையைச் சமன் செய்திருந்தார் டோணி. தற்போது அஸாருதீனை மிஞ்சி விட்டார் டோணி.

சாதனைகள் நிறைய தம்பி!

சாதனைகள் நிறைய தம்பி!

டோணியிடம் இதேபோல மேலும் பல சாதனைகள் பாக்கெட்டில் உள்ளன. ஐசிசியின் டுவென்டி உலகக் கோப்பை, ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்ற முதல் சர்வதேச கேப்டன் டோணிதான்.

எல்லாப் புகழும் ரசிகர்களுக்கே...!

எல்லாப் புகழும் ரசிகர்களுக்கே...!

அஸாருதீன் சாதனையை மிஞ்சியது குறித்து டோணி கருத்து தெரிவிக்கையில், எல்லாவற்றுக்கும் ரசிகர்கள்தான் காரணம். அவர்களுக்குத்தான் இந்தப் பெருமை போய்ச் சேர வேண்டும். நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது ரசிகர்கள்தான் முழு ஆதரவு தெரிவித்து தட்டிக் கொடுத்தனர். எனது அணிக்காக பெருமைப்படுகிறேன் என்றார் டோணி.

மற்ற கேப்டன்கனின் வெற்றிக் கணக்கு

மற்ற கேப்டன்கனின் வெற்றிக் கணக்கு

டோணி கேப்டனாக 162 போட்டிகளில் ஆடி 91 போட்டிகளில் வென்றுள்ளார். அஸாருதீன் - 174-90, கங்குலி - 146-76, ராகுல் டராவிட் - 79-42, கபில் தேவ் - 74 -39.

Story first published: Wednesday, September 3, 2014, 13:44 [IST]
Other articles published on Sep 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+