Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிக்கலை.. ஆனா "கைட்" பண்ணி ஜார்க்கண்ட் அணிக்கு மோட்சம் கொடுக்கும் டோணி

பெங்களூரு: கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட, சரியாக பேட் செய்யாவிட்டாலும் கூட, தனது அணியினரைத் தட்டிக் கொடுத்து வழிநடத்தி வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி.

ஜார்க்கண்ட் அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெற்று, விஜய் ஹஸாரே ஒரு நாள் போட்டித் தொடரில் ஆடி வருகிறார் டோணி. டோணி இதுவரை ஒரு அரை சதம் கூட இத்தொடரில் போடவில்லை. ஆனாலும் தனது அணியினருக்கு உற்ற துணையாக இருந்து அவர்கள் வெற்றி பெற உதவுகிறார்.

'Captain' MS Dhoni inspires Jharkhand to victory against Karnataka

இன்று நடந்த போட்டியில் கர்நாடக அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணி வீழ்த்தியது. இன்றைய போட்டியில் டோணி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடரில் இதுவரை 9, 44, 18,1 என்று சொற்ப ரன்களே டோணி எடுத்துள்ளார். இருப்பினும் சந்தித்த 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் ஜார்க்கண்ட் வென்றுள்ளது. டோணி கொடுத்து வரும் ஊக்கமே இதற்குக் காரணம். பி பிரிவில் ஜார்க்கண்ட் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

தற்போது காலிறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் ஜார்க்கண்ட்டுக்கு அதிகமாக உள்ளது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 6 போட்டிகளில் மோதும். இறுதியாக ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு நுழையும்.

Story first published: Tuesday, December 15, 2015, 17:58 [IST]
Other articles published on Dec 15, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+