Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: “இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே இவங்கதான்.. நம்பிக்கை தந்திருக்காங்க”.. கில் மகிழ்ச்சி

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அதற்கு காரணம் யார் என குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக, அணியின் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த விதம் தனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 259 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. அப்போது சுப்மன் கில் 80 ரன்கள் எடுத்து கால் தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். கோலி, ரோஹித், ஸ்ரேயாஸ், ராகுல் என சிறந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது ஆல் ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் கூட்டணி அமைத்து இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

Captain Shubman Gill points out India s middle order batting is the reason for victory against England in 1st ODI

இதுகுறித்து போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் சுப்மன் கில் பேசினார். "எங்கள் அணியின் மிடில் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது ஒரு கேப்டனாக எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தருகிறது. எங்களிடம் இளமையான பந்துவீச்சு கூட்டணி உள்ளது. ஆனால், எங்களது பேட்டிங் வரிசை மிகவும் அனுபவம் வாய்ந்தது. இதனால், இங்கிலாந்து அணி 300 முதல் 320 ரன்கள் வரை எடுத்திருந்தாலும், அதனை எங்களால் சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது."

பந்துவீச்சாளர்களின் கம்பேக்

"நடு ஓவர்களில் எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. பவர்பிளேவின் இறுதியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால், அதற்குப் பிறகும் நாங்கள் மீண்டு வந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் முக்கியமானது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பலத்தை அதிகரிக்க, வரும் போட்டிகளில் பல்வேறு காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்ப்போம். அது எங்களுக்கு நீண்ட பேட்டிங் வரிசையை தரும்."

 IND vs ENG: பெரிய பேட்ஸ்மேன்களே வேண்டாம்.. இந்தியா வெற்றி.. இங்கிலாந்தை வீழ்த்திய சுந்தர், அக்சர்

IND vs ENG: பெரிய பேட்ஸ்மேன்களே வேண்டாம்.. இந்தியா வெற்றி.. இங்கிலாந்தை வீழ்த்திய சுந்தர், அக்சர்

தென்னாப்பிரிக்கா போன்ற சூழல்:

"இங்கு நிலவிய சூழ்நிலை தென்னாப்பிரிக்கா போன்றே இருந்தது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது, இதனால் ஆரம்பத்தில் ரன் குவிப்பது எளிதாக இல்லை. அதன் பிறகு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது." என்றார் கேப்டன் சுப்மன் கில்.

IND vs ENG: செஞ்சுரி கூட வேண்டாம்.. பாதி மேட்ச்சில் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில்.. என்ன நடந்தது?

IND vs ENG: செஞ்சுரி கூட வேண்டாம்.. பாதி மேட்ச்சில் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில்.. என்ன நடந்தது?
Story first published: Wednesday, July 15, 2026, 6:35 [IST]
Other articles published on Jul 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+