For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பாடா.. 5வது டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை ருசித்த 'கேப்டன்' கோஹ்லி!

By Veera Kumar

கொழும்பு: விராட் கோஹ்லியின் கேப்டன்ஷிப்பின் கீழ், இந்திய அணி விளையாடிய 5வது போட்டியில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக செயல்பட்ட டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து கோஹ்லி டெஸ்ட் அணிக்கான கேப்டனாகினார்.

வங்கதேசத்துடன் டிரா

வங்கதேசத்துடன் டிரா

கோஹ்லி கேப்டனான பிறகு, முதல் முறையாக இந்தியா வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடியது. மழையால் அந்த டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இப்போட்டி பதுல்லாவில் இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

முதல் போட்டியில் தோல்வி

முதல் போட்டியில் தோல்வி

இலங்கையில் தற்போது இந்தியா சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இன்றுடன் நிறைவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 278 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.

தற்காலிக கேப்டன்

தற்காலிக கேப்டன்

டோணி விளையாடாத நேரங்களிலும் கோஹ்லி தற்காலிக கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2014 டிசம்பரில் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டை இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. அப்போது கோஹ்லி கேப்டனாக செயல்பட்டார்.

5வது போட்டியில் வெற்றி

5வது போட்டியில் வெற்றி

2015, ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, டெஸ்ட் போட்டி டிரா ஆனது. தற்காலிக கேப்டனாக 2 டெஸ்ட், நிரந்தர கேப்டனாக இரு டெஸ்ட் என 4 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை ருசிக்காத கோஹ்லி, இன்றைய டெஸ்ட் வெற்றியின்மூலம், முதல் வெற்றியை ருசித்துள்ளார்.

Story first published: Monday, August 24, 2015, 13:35 [IST]
Other articles published on Aug 24, 2015
English summary
In the ongoing series in Sri Lanka, India lost from a winning position in Galle. But they bounced back in Colombo to level the series 1-1. It was a moment to cherish for Kohli as his first Test win as captain came in Sri Lankan great Kumar Sangakkara's last match. Team India and its fans will be hoping this is just the beginning of many more Test victories under Kohli's leadership.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+