Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சங்கடமாக இருந்தது”.. சாஹலை புறக்கணித்த அணித்தேர்வாளர்கள்.. காரசார விவாதத்தை விளக்கிய கோலி!

அமீரகம்: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் யுவேந்திர சாஹல் குறித்து நடைபெற்ற கார சார விவாதம் குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

Recommended Video

ICC T20 World Cup- Virat Kohli Has His Say On Ind Vs Pak Cricket Rivalry | Oneindia Tamil

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு, தயாராகி வருகிறது.

இந்திய படை

இந்திய படை

பேட்டிங்: விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்)

ஆல்ரவுண்டர்: ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,

பவுலர்கள்: ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

இந்த அணியில் பேட்டிங்கில் ஓரளவுக்கு அனைவரும் எதிர்பார்த்தபடியே அணி தேர்வு இருந்த போதும், பந்துவீச்சு படையில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களின் தேர்வில் தான். நீண்ட நாட்களாக டி20 போட்டியில் சேர்க்கப்படாமல் இருந்த அஸ்வின் உலகக்கோப்பை அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2017ம் ஆண்டு தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பங்கேற்றிருந்தார். அஸ்வினுடன் சேர்த்து ஜடேஜாவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பவுலிங்கில் சர்ஃபரைஸ்

பவுலிங்கில் சர்ஃபரைஸ்

அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு அடுத்தபடியாக ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆச்சரியப்படும் வகையில் யுவேந்திர சாஹல் - குல்தீப் யாதவ் ஜோடி ஒதுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விராட் கோலியின் ஆஸ்தான பவுலராக ஆர்சிபி அணியில் விளங்கும் சாஹல் தொடர்ந்து இந்திய அணிக்கு விளையாடி வந்தார். இந்த சூழலில் அவரும் தற்போது ஒதுக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

ஏன் புறக்கணிக்கப்பட்டார்

ஏன் புறக்கணிக்கப்பட்டார்

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து சாஹல் ஒதுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். சாஹலை நீக்கியது சங்கடமான முடிவுதான். கடந்த சில வருடங்களாக இந்தியாவின் முக்கியமான பவுலராக சாஹல் விளங்குகிறார். அவரின் பெயர் அணித்தேர்வின் போது கூறப்பட்டது. ஆனால் வேகமாக பந்துவீச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவர் நீக்கப்பட்டார்.

வேகமான பவுலர்

வேகமான பவுலர்

போட்டி நடைபெறவிருக்கும் அமீரகத்தில் நேரம் போக போக பிட்ச்-ல் வேகம் குறையும். எனவே அங்கு முடிந்த அளவிற்கு வேகமாக போடக்கூடிய பவுலர்களே தேவை. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் யுவேந்திர சாஹலை புறக்கணித்துவிட்டு ராகுல் சஹாரை எடுத்தோம். ராகுல் சஹார் ஐபிஎல், இலங்கை தொடர் என தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் நிச்சயம் இக்கட்டான சூழலில் உதவுவார் என நம்புகிறோம்.

Story first published: Sunday, October 17, 2021, 14:24 [IST]
Other articles published on Oct 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+