ஏனோ தெரியவில்லை, கும்ப்ளேவை கோஹ்லிக்கு பிடிக்கவில்லை.. பிசிசிஐ மாஜி நிர்வாகி வெளியிட்ட பரபர தகவல்!
புனே: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டது தொடர்பாக, கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து, எதிர்ப்பு கூறிவந்ததாக, பிசிசிஐ முன்னாள் செயலாளர் அஜய் ஷிர்கே தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக 2 ஆண்டுகள் பதவி வகித்துவந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான அனில் கும்ப்ளே, கடந்த ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உரிய தகுதிகளை அவர் பெற்றிருக்காத நிலையிலும், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லஷ்மணன் ஆகிய கிரிக்கெட் குழுவின் ஆதரவில் கும்ப்ளேவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.
இதே காலத்தில், அஜய் ஷிர்கே பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வந்தார். அவரிடமும், கும்ப்ளே தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் அனில் கும்ப்ளே
இந்நிலையில், தற்போது ஓராண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கும்ப்ளேவுக்கு பதிலாக, புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க, பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில், மீண்டும் அனில் கும்ப்ளே விண்ணப்பம் செய்துள்ளார்.

வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்
ஆனால், அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. காரணம், கும்ப்ளே தலைமை பயிற்சியாளர் பதவியில் தொடர்வதை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விரும்பவில்லை என்றும், கடந்த ஓராண்டாகவே அவர் இதுதொடர்பாக அதிருப்தி கூறிவந்தார் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கும்ப்ளேவுக்கு போட்டியாக சேவாக்
மேலும், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி, முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை, கோலி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இதன்பேரில், தற்போது வீரேந்திர சேவாக் மற்றும் டாம் மூடி ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சேவாக் பயிற்சியாளராக வாய்ப்பு
சேவாக், பயிற்சியாளர் பதவியை பெறும் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி பிசிசிஐ முன்னாள் செயலாளர் அஜய் ஷிர்கே தற்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

கும்ப்ளேயை எதிர்க்கும் கோஹ்லி
அதன்படி, விராட் கோஹ்லி, ஆரம்பம் முதலாகவே, கும்ப்ளே நியமனத்தை எதிர்த்து வந்தார் எனவும், தற்போதும் அந்த எதிர்ப்புணர்வு காரணமாக, கோஹ்லி, சேவாக்கை கேட்டுக் கொண்டார் எனவும் அஜய் ஷிர்கே தெரிவித்துள்ளார். கேப்டனை கலந்து ஆலோசிக்காமல் தலைமை பயிற்சியாளரை நியமிப்பது தவறு என, கோஹ்லி கூறியதாக, ஷிர்கே குறிப்பிட்டுள்ளார்.

கோஹ்லிக்கு கும்ப்ளேவை பிடிக்கவில்லை
காரணம் சரியாக தெரியாவிட்டாலும்,கோஹ்லிக்கு கும்ப்ளேவை பிடிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது என்றும், ஷிர்கே சுட்டிக்காட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications