Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே!

மும்பை : இந்திய அணியின் கேப்டன் கோலி தன் எதிர்கால திட்டம் குறித்து பேசுகையில், கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம் என கூறியுள்ளார்.

கோலி உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருக்கும் நிலையில், கிரிக்கெட் தனக்கு முக்கியமில்லை என கூறி ஆச்சரியம் அளித்துள்ளார்.

குடும்பம்தான் எனக்கு முக்கியம்

குடும்பம்தான் எனக்கு முக்கியம்

கோலி கிரிக்கெட்டா, குடும்பமா எது முக்கியம் என்பது குறித்து பேசுகையில், "8 வருடம் ஆகி விட்டது (சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கி), ஆனால், குடும்பம்தான் எனக்கு முக்கியம். கிரிக்கெட் என் வாழ்வின் அங்கம், ஆனால் குடும்பம் தான் எப்போதும் முக்கியம்" என கூறினார்.

இதெல்லாம் நம்பவில்லை

இதெல்லாம் நம்பவில்லை

மேலும், "சிலர் வாழ்க்கை முக்கியம் என நினைப்பார்கள். அப்புறம், கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நீங்கள் உண்மையாக இல்லை என்பார்கள். நான் அதை நம்பவில்லை" என கூறியுள்ளார்.

பேட்டை தொடவே மாட்டேன்

பேட்டை தொடவே மாட்டேன்

கோலி ஏற்கனவே ஓய்வுக்கு பின் என்ன செய்வீர்கள் என்பது குறித்து பேசுகையில் தான் ஓய்வுக்கு பின் பேட்டை தொடவே மாட்டேன். கிரிக்கெட் ஆடியது போதும் என்ற முடிவுக்கு பின் தான் ஓய்வு எடுப்பேன். அதன் பின் பேட்டை எடுக்கவே மாட்டேன் என கூறினார்.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

கோலி இன்று கிரிக்கெட் உலகின் முன்னணி வீரராக இருக்கிறார். ஆனால், குடும்பம் தான் முக்கியம். கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி தான் என கூறுவது நம்ப முடியாததாகவே இருக்கிறது.

கடும் உழைப்பு

கடும் உழைப்பு

கோலி கடந்த காலங்களை ஒப்பிடும் போது கிரிக்கெட்டில் உடற்தகுதியை பெற கடுமையாக உழைத்து வேறு ஒரு கோலியாக மாறியுள்ளார். ஆனால். கிரிக்கெட் முக்கியமில்லை என கூறியுள்ளார்.

Story first published: Monday, January 21, 2019, 12:40 [IST]
Other articles published on Jan 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+