Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடுத்த விராட் கோலி ரெடி”.. கேப்டன்சியில் இப்படி ஒரு ரெக்கார்டா?.. யாஷ் துல்-க்கு அடித்த அதிர்ஷ்டம்!

வெஸ்ட் இண்டீஸ்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள இளம் வீரர் யாஷ் துல், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Recommended Video

U19 World Cup Semi Final-ல் Virat Kohli-ன் சாதனையை சமன் செய்த Yash Dhull

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குள் நேற்று இந்திய அணி நுழைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 290 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 194 ரன்களுக்குள் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

என்ன சிறப்பு

என்ன சிறப்பு

இந்திய அணியின் வெற்றிக்கு கேப்டன் யாஷ் துல் மிக முக்கிய காரணம். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆங்கிரிஷ் 6 ரன்கள், ஹர்னூர் சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 37 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷாயிக் ரஷித் ஜோடி சேர்ந்து மீட்டுக்கொண்டு வந்தனர்.

சதம் விளாசல்

சதம் விளாசல்

போட்டி நடைபெற்ற பிட்ச், மிகவும் ஸ்லோவாக இருந்த போதும் கிளாசிக் ஷாட்ஸ் ஆடியும், சிங்கிள்கள் அடித்தும் தனது ஸ்ட்ரைக்கை மாற்றிக்கொண்டே இருந்தார் யாஷ் துல். அவரின் இந்த செயல்பாடுகள் அனைவருக்கும் கேப்டன் விராட் கோலியையே கண் முன் நிறுத்தியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், சதம் விளாசி அசத்தினார்.

சாதனை

சாதனை

110 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் U19 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய 3வது இந்திய கேப்டன் என்ற சாதனையை யாஷ் தல் படைத்தார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு விராட் கோலியும், 2012ம் ஆண்டு உன்முக்த் சந்த் ஆகியோர் மட்டுமே சதமடித்துள்ளனர்.

சிறப்பான கேப்டன்சி அனுபவம்

சிறப்பான கேப்டன்சி அனுபவம்

விராட் கோலியை போன்றே எதிர்காலத்தில் சிறப்பான கேப்டனாக வலம் வர யாஷ் துல்லிற்கு வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அவரின் கேப்டன்சி திறன். அவர், U 16, U 19 பிரிவுகளில் டெல்லி அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்துள்ளார். 2021ம் ஆண்டு ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதால், உலகக்கோப்பையில் கேப்டன்சி செய்யும் வாய்ப்பு தரப்பட்டது.

அதிரடி ஃபார்ம்

அதிரடி ஃபார்ம்

பேட்டிங்கை பொறுத்தவரையில் யாஷ் துல் கடந்த சில மாதங்களாகவே சிறப்பான ஃபார்மில் உள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக டெல்லி அணிக்காக உள்நாட்டு தொடரில் விளையாடிய யாஷ், வெறும் 5 போட்டிகளில் 302 ரன்களை விளாசினார். அவரின் சராசரி ரன் 75.50 ஆக உள்ளது. இதனால் இந்தியாவின் மெயின் அணியையும் இவர் கேப்டன்சி செய்யலாம் என வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.

Story first published: Thursday, February 3, 2022, 11:12 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+