Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புது கேப்டன் ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்... கொல்கத்தாவை சுருட்டி அள்ளியது டெல்லி!

Recommended Video

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி... கொல்கத்தாவை வென்றது டெல்லி

டெல்லி: ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றது. டெல்லியில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி 55 ரன்களில் வென்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. 25 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத், பஞ்சாப் ஆகியவை அடுத்த நிலையில் உள்ளன.

புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் டெல்லியில் நடக்கும் சீசனின் 27வது ஆட்டத்தில் விளையாடின.

இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் டெல்லி டேர்டெவில்ஸ் ஒன்றில் மட்டுமே வென்றது. கொல்கத்தா அணிக்காக கேப்டனாக இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார். தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

ஸ்ரேயாஸுக்கு டெஸ்ட்

ஸ்ரேயாஸுக்கு டெஸ்ட்

டெல்லி அணியின் 11வது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவர் சந்திக்கும் முதல் போட்டி என்பதால், இன்றைய போட்டி அவருக்கு வைக்கப்பட்டுள்ள டெஸ்டாக அமைந்தது.

கொல்கத்தாவுக்கு வாய்ப்பு

கொல்கத்தாவுக்கு வாய்ப்பு

கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் 3ல் வெற்றி, 3ல் தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. தமிழரான அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணிக்கு பிளேஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பாக இன்றைய போட்டியின் வெற்றி அமைந்தது.

டெல்லி அதிரடி ரன்குவிப்பு

டெல்லி அதிரடி ரன்குவிப்பு

டெல்லியில் நடந்த ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து. பிருத்வி ஷா 62, கோலின் முன்ரோ 33, கிளென் மேக்ஸ்வெல் 27 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் டெல்லி முதல் முறையாக 200க்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது.

டெல்லிக்கு அபார வெற்றி

டெல்லிக்கு அபார வெற்றி

கொல்கத்தாவுக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் டெல்லியின் திடீர் எழுச்சியை சமாளிக்க முடியாமல் திணறி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. ஆந்தரே ரசல் 44, ஷப்னம் கில் 37, சுனில் நரேன் 26, தினேஷ் கார்த்திக் 18, மிச்சைல் ஜான்சன் 12 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களுக்கு கொல்கத்தா சுருண்டது. இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

Story first published: Friday, April 27, 2018, 23:58 [IST]
Other articles published on Apr 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+