வைட் பால், புல்-டாஸ் பாலால ஆட்டமே மாறிப்போயிடுது... அத ஆய்வுசெய்ய சான்ஸ் வேணும்
துபாய் : டி20 போன்ற போட்டிகளில் வைட் பால் மற்றும் இடுப்புக்கு மேலிருந்து போடப்படும் புல்-டாஸ் பந்துகள் குறித்த தவறான முடிவால் ஆட்டமே மாறும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த பந்துகளை ஆய்வு செய்ய ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் கேப்டன்களுக்கு சான்ஸ் அளிக்கப்பட வேண்டும் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.
பூமா இந்தியா இன்ஸ்டாகிராம் லைவ் சாட் நிகழ்ச்சியில் கே.எல் ராகுலுடன் பேசிய அவர், இதுகுறித்து அணி வீரர்களுடன் தான் அதிகமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பரபர போட்டிகள்
ஐபிஎல் தொடர் கடந்த 19ம் தேதி துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்டத்தில் அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன. பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற போராடி வருகின்றன. கடந்த சீசனிலிருந்து வித்தியாசமாக இளம் வீரர்களை கொண்ட அணிகள் தங்களது வலிமையை இந்த சீசனில் காட்டி வருகின்றன.

ஆய்வு செய்ய சான்ஸ்
இந்நிலையில் வைட் பால் மற்றும் இடுப்புக்கு மேலே போடப்படும் புல்-டாஸ் பந்துகளை ஆய்வு செய்ய கேப்டன்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். பூமா இந்தியா இன்ஸ்டாகிராம் லைவ் சாட் நிகழ்ச்சியில் கே.எல். ராகுலுடன் பேசிய அவர், இதுகுறித்து அணி வீரர்களுடன் தொடர்ந்து தான் ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஐபிஎல் போட்டிகளில் பாதிப்பு
டி20 போன்ற போட்டிகளில் இத்தகைய வைட் பால் அல்லது புல்-டாஸ் பந்துகளில் தவறான முடிவெடுக்கப்படும்போது அதனால் போட்டிகளில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிலும் ஐபிஎல் போன்ற தொடர்களில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இரண்டு வாய்ப்பு வழங்க கோரிக்கை
ஐபிஎல் போன்ற போட்டிகளில் ஒரு ரன்னில் கூட வெற்றி கைநழுவும் வாய்ப்பு உள்ளதாகவும் அது இதுபோன்ற பந்துகளால் ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய ராகுல், இதுபோன்ற வாய்ப்பு வழங்கப்பட்டால், அணிக்கு இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ள வழங்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications