Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சபாஷ்..! யாருக்கும் தடை இல்லை... மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் பண்ணலாம்..!

துபாய்: இனி மெதுவாக ஓவர் வீசும் அணிகளின் கேப்டன்களும் தடையோ அல்லது சஸ்பெண்ட்டோ செய்யப்பட மாட்டார்கள் என ஐசிசி புதிய விதி முறைகளை அறிவித்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியிருக்கும் நிலையில், ஐசிசியானது, டெஸ்ட் போட்டிகளுக்கான சில விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான விதி என்னவென்றால் ஒரு நாளில் மெதுவாக அவர் போடும் அணிகளின் கேப்டன்களுக்கு தடை காலம் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் இத்தனை ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்பது விதியாகும். அதை மீறினால், வீரர்களுக்கு சில போட்டிகள் தடைசெய்யப்படுவது வழக்கம். தற்போது அந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்திருக்கிறது.

ஐசிசியின் புதிய விதிகள்

ஐசிசியின் புதிய விதிகள்

இதுதவிர மேலும் சில விதிகளை கொண்டு வந்திருக்கிறது. அதாவது, ஸ்லோ ஓவர் ரேட் எனப்படும் மெதுவாக பந்துவீசும் நிலை இருந்தால் கேப்டன் மட்டும் பொறுப்பல்ல, மொத்த அணியும் பொறுப்பாகும். இதனால் அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். கேப்டனுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

11 வீரர்கள்

11 வீரர்கள்

மேலும், காயமடைந்து வெளியேறும் வீரர்களால் அணிக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க புதிய விதியை ஐசிசி அமல்படுத்துகிறது. கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஒரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங், பவுலிங் செய்து வந்தனர்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

அவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் பீல்டிங் மட்டும் தான் செய்வார். பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது. போட்டியின் போது ஒரு வீரர் காயம் காரணமாக விளையாடாமல் வெளியேறினால் அவர் ரிட்டையர்டு ஹர்ட் என்று அறிவிக்கப்படுவார்.

கோரிக்கை முன்வைப்பு

கோரிக்கை முன்வைப்பு

அதனால் வீரர் காயம்படும் அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சில் சிக்கல் நீடித்து வந்தது. தலையில் பலமாக அடிப்பட்டு வீரரால் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த மாற்றுவீரர்க்கு பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். இதே போன்று பந்துவீசவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அனுமதித்த ஐசிசி

அனுமதித்த ஐசிசி

நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பின் ஐசிசி தற்போது இந்த விதிக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆடும் லெவன் அணியில் எந்த வீரராவது பலத்த காயம் காரணமாக வெளியேறினால் மாற்று வீரர் பேட்டிங் செய்யலாம், பந்துவீசலாம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. அந்த தொடரில் முதன்முதலாக ஐசிசி அறிவித்து உள்ள இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

Story first published: Friday, July 19, 2019, 17:15 [IST]
Other articles published on Jul 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+