Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்காவிலும் காலெடுத்து வைக்கும் கரீபியன் பிரிமியர் லீக்!

புளோரிடா: ஐபிஎல் பாணியில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடத்தப்படும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் அமெரிக்காவில் முதன் முறையாக நடைபெறவுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போலவே இப்போது பல நாடுகளிலும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை என இப்போட்டித் தொடர்கள் களை கட்டி வருகின்றன.

கரீபியன் பிரிமியர் லீக்

கரீபியன் பிரிமியர் லீக்

4-வது கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 29-ந் தேதி தொடங்கிய கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆக., 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.

மேற்கு இந்தியத் தீவுகள்

மேற்கு இந்தியத் தீவுகள்

போட்டிகள் டிரினிடாட் டொபாகோ, செயின் கிட்ஸ் அன்ட் நெவிஸ், கயானா, பார்படாஸ், ஜமைக்கா, செயின்ட் லூசியா மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் நடத்தப்படுகிறது.

அமெரிக்காவிலும்

அமெரிக்காவிலும்

இதில் அமெரிக்காவில் முதல் முறையாக கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. அங்குள்ள புளோரிடா மாகாணத்தில் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. அமெரிக்காவில் ஜூலை 26-ம் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி போட்டிகள் வரை நடைபெறவுள்ளது.

பெரும் கூட்டம்

பெரும் கூட்டம்

இது தொடர்பாக தகவல் தொடர்பு இயக்குனர் பீட்டர் ப்ரென் கூறியதாவது: கடந்த ஆண்டு ஸ்டேடியத்திற்கு பார்வையாளர்களாக வந்தோர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கிறது. அதேபோல உலகம் முழுவதும் தொலைக்காட்சியின் மூலம் 9 கோடி பேர் கரீபியன் பிரிமியர் லீக் தொடரை பேர் கண்டு களித்துள்ளனர்.

மார்க்கெட்டைப் பிடிக்கும் வகையில்

மார்க்கெட்டைப் பிடிக்கும் வகையில்

இந்நிலையில், அமெரிக்காவில் கிரிக்கெட் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும், கிரிக்கெட்டுக்கான சந்தையை அதிகரிக்கவும் கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரின் சில போட்டிகளை அங்கு நடத்த திட்டமிடப்பட்டது.

Story first published: Sunday, July 24, 2016, 15:59 [IST]
Other articles published on Jul 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+