Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2016 டி20 வேர்ல்டு கப் "புயல்"யா அவரு.. நாடா கோர்க்க விட்டுடீங்களே - ஏதோ "சல்வார் சேலஞ்சாம்"

அமீரகம்: பிஎஸ்எல் டி20 லீக் தொடர் திட்டமிட்டப்படி தொடங்குமா, தொடங்காதா என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, மறுபுறம் 'சல்வார் சவால்' செய்து என்ஜாய் செய்து கொண்டிருக்கின்றனர் வீரர்கள். இருந்தாலும், அதுவும் ஜாலியாத் தான் இருக்கு.

பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் மீதமுள்ளன.

 விசா சிக்கல்

விசா சிக்கல்

இந்த நிலையில், ஐபிஎல் போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் மே 25ம் தேதி அபுதாபி புறப்பட தயாராக இருந்தனர். ஆனால், பல வீரர்களுக்கு விசா கிடைக்கவில்லை. அமீரகத்தில் தரையிறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

 பாக்., வாரியம் குழப்பம்

பாக்., வாரியம் குழப்பம்

இந்த தாமதம் காரணமாக, தொடரை ஜூன் 5ம் தேதிக்கு பதிலாக ஜூன் 7ம் தேதி தொடங்க ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், இறுதிப்போட்டி ஜூன் 20ம் தேதிக்கு பதில், ஜூன் 24ம் தேதி தள்ளிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புது தலைவலியாக, பிஎஸ்எல் தொடரின் ஒளிபரப்புக் குழுவிற்கு இன்னமும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், திட்டமிட்டப்படி தொடர் நடக்குமா என்ற குழப்பத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.

 கார்லஸ் பிரத்வெயிட்

கார்லஸ் பிரத்வெயிட்

இப்படி நிலைமை ஒருபுறம் சிக்கலாகிக் கொண்டிருக்க, மறுபுறம் வீரர்களை ரிலாக்ஸாக வைத்திருக்க, அணி நிர்வாகங்கள் முயன்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, Jamaica Tallawahs அணி வீரர்கள் 'shalwarChallenge' எனும் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில், Jamaica Tallawahs வீரர் கார்லஸ் பிரத்வெயிட், நாடா கோர்க்கும் போட்டியில் கலந்து கொண்டார். அதாவது, சல்வாரில் நாடா கோர்க்கும் போட்டி. (யோவ்.. 2016 டி20 உலகக் கோப்பை ஃபைனல்-ல, பென் ஸ்டோக்ஸ் போட்ட கடைசி ஓவர்ல, நாலு சிக்ஸ பேக் டூ பேக் பறக்கவிட்டு, வெஸ்ட் இன்டீஸை ஜெயிக்க வைத்தவர நாடா கோக்க வுட்டுடீங்களே!!). ஆனா. ரொம்ப நேரமா பிரத்வெயிட் கையை இங்கயும், அங்கயும் ஆட்டிக்கிட்டு இருந்தாலும், நாடா மட்டும் கோர்த்த பாடில்லை.

 ஏதோ பொழுது போகுது

ஏதோ பொழுது போகுது

கடைசி அவரை அவரால் சரியாக, முழுமையாக சல்வாரில் நாடாவை கோர்க்க முடியவில்லை. இப்படியாக ஜாலியாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றன. பிஎஸ்எல் அணிகள். வரும் ஜூன் 7 அல்லது 8ம் தேதி தொடரை நடத்த பாகிஸ்தான் வாரியம் போராடி வருகிறது. ஐபிஎல் தொடர் இதே அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 3, 2021, 21:49 [IST]
Other articles published on Jun 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+