Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாலியல் புகாரில் சிக்கிய பாக்.வீரர்.. 14 வயது சிறுமி என்றும் பாராமல்.. துப்பாக்கி முனையில் கொடூரம்!

லாகூர்: பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சுழற்பந்துவீச்சாளராக இருப்பவர் யாஷிர் ஷா..

Recommended Video

Pakistan Spinner Yasir Shah செய்த கொடூரம்! Friendக்கு உதவியதால் FIR File ஆனது | OneIndia Tamil

35 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் விளையாடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

லெக் ஸ்ப்பினரான இவருக்கு பாகிஸ்தானில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் இன்று அவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

களத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்த யாஷிர் ஷா.. களத்திற்கு வெளியே, ஒரு மோசமான நபராக வாழ்ந்து வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உன் நண்பனை பற்றி சொல், உன்னை பற்றி சொல்கிறேன் என்ற பழமொழிக்கு ஏற்ப யாஷிர் ஷாவும், அவரது நண்பரும் செய்த காரியம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மிரட்டல்

மிரட்டல்

யாஷிர் ஷாவின் நண்பரான ஃபர்ஹான், 14 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த குற்றத்திற்கு யாஷிர் ஷாவும் உடந்தையாக இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் யாஷிர் ஷாவிடம் புகார் அளிக்க, தனது நண்பன் செய்ததை வெளியே சொன்னால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.

சொகுசு வீடு

சொகுசு வீடு

மேலும் தமக்கு பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்பதால், இந்த விசயத்தை பெரிது படுத்தாமல் இருக்க வேண்டும் என்று யாஷிர் ஷா கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைதி காத்தால் சொகுசு வீடு மற்றும் மாத செலவுக்கு பணத்தை தருவதாக யாஷிர் ஷா கூறியுள்ளார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

தனது நண்பருக்கு சிறுமி என்றால் பெரும் ஈஷ்டம் என்றும் யாஷிர் ஷா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண், ஃபர்ஹான் மற்றும் யாஷிர் ஷா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பலாதகாரத்திற்கு உதவியது, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் யாஷிர் ஷா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உதவி கேட்டு சென்ற சிறுமியை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த விவகாரம் குறித்து யாஷிர் ஷா இதுவரை வாய் திறக்கவில்லை.

Story first published: Tuesday, December 21, 2021, 10:44 [IST]
Other articles published on Dec 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+