Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் அணி மீது வழக்கு


ஜலந்தர்:

20-20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பின்னர் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இந்திய வீரர்கள் நடந்து கொண்டதாக கூறி ஜலந்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடந்த 20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா, அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள், தேசியக் கொடியை போர்வை போல போர்த்திக் கொண்டும், தூக்கிப் பிடித்தபடி ஓடியும் கொண்டாடினர்.

மேலும், பீர் பாட்டில்களை உடைத்து வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் ஊற்றினர். அப்போது தேசியக் கொடியுடன் வீரர்கள் இருந்தனர்.

இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என்று கூறி ஜலந்தரைச் ேசர்ந்த வக்கீல் ஒருவர் ஜலந்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய கேப்டன் டோணி உள்ளிட்டோர் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+