For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: அப்பப்பா...! ஐபிஎல் பெஸ்ட் கேட்ச்? துரத்திக் கொண்டே சென்று தாவி பிடித்த தினேஷ் கார்த்திக்

மும்பை:மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்சாக வர்ணிக்கப்படுகிறது.

ஐபிஎல் சீசனில், தகுதிச்சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம்.

Catch of the ipl season? dinesh karthik pulls off a stunner to dismiss quinton de kock

அந்த நிலையில், மும்பையை எதிர்கொண்டது கொல்கத்தா. போட்டியில் முழுக்க மும்பை இந்தியன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. 134 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

கொல்கத்தா அணியானது அந்த போட்டியில் ஒரேயொரு விக்கெட்டை தான் சாய்த்தது. அது குயிண்டன் டி காக்கின் விக்கெட். மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளேயில் விக்கெட்டை இழக்கவில்லை. பவர்பிளே முடிந்து முதல் ஓவரின்(அதாவது 7வது ஓவர்) முதல் பந்திலேயே டி காக் ஆட்டமிழந்தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சரை பைன் லெக் திசையில் தூக்கி அடித்தார் டி காக். அந்த பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிவேகமாக துரத்திக் கொண்டு சென்று லாவகமாக பிடித்தார். அந்த போட்டியில் கொல்கத்தா தோற்றிருந்தாலும் நடப்பு சீசனின் சிறந்த கேட்சாக பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, May 6, 2019, 14:37 [IST]
Other articles published on May 6, 2019
English summary
Catch of the ipl season? dinesh karthik pulls off a stunner to dismiss quinton de kock.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+