Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CCL 2026: சினிமா ஸ்டார்ஸ் மோதும் கிரிக்கெட் திருவிழா.. கோலாகல துவக்கம்.. எந்த சேனலில் பார்ப்பது?

சென்னை: சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் ட்ரீட் கொடுக்கத் தயாராகிவிட்டது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL). இந்தியாவின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்களாக அவதாரம் எடுக்கும் CCL தொடரின் 12-வது சீசன் இன்று (ஜனவரி 16, வெள்ளிக்கிழமை) கோலாகலமாகத் தொடங்குகிறது.

வழக்கம் போல அனல் பறக்கும் பேட்டிங், திரையுலக மோதல்கள் என அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொழுதுபோக்கிற்குப் பஞ்சமே இருக்காது.

CCL 2026 Celebrity Cricket League Telecast Details Teams and Venue Info

மீண்டும் வந்த கேரளா.. மொத்தம் 8 அணிகள்:

இந்த முறை மொத்தம் 8 அணிகள் களத்தில் மோதுகின்றன. கடந்த சீசனில் மிஸ்ஸான கேரள ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, இந்த முறை மீண்டும் மாஸாக என்ட்ரி கொடுப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

களமிறங்கும் 8 அணிகள் இதோ:

வேல்ஸ் சென்னை கிங்ஸ் (தமிழ் - கோலிவுட்)
மும்பை ஹீரோஸ் (இந்தி - பாலிவுட்)
தெலுங்கு வாரியர்ஸ் (தெலுங்கு - டாலிவுட்)
கர்நாடகா புல்டோசர்ஸ் (கன்னடம் - சாண்டல்வுட்)
கேரள ஸ்ட்ரைக்கர்ஸ் (மலையாளம் - மாலிவுட்)
பெங்கால் டைகர்ஸ் (வங்காளம்)
போஜ்புரி தபாங்ஸ் (போஜ்புரி)
பஞ்சாப் டி ஷெர் (பஞ்சாபி)

எங்கெல்லாம் மேட்ச் நடக்குது?

ஜனவரி 16-ம் தேதி (இன்று) தொடங்கும் இத்தொடர், பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் பஞ்சாப் டி ஷெர் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை கிங்ஸ் அணி ஜனவரி 18 அன்று தனது முதல் போட்டியில் பெங்கால் டைகர்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது.

நேரடி ஒளிபரப்பு - எந்த சேனலில் பார்ப்பது?

மைதானத்திற்குச் சென்று பார்க்க முடியாதவர்கள், வீட்டிலிருந்தபடியே டிவியில் போட்டிகளை கண்டுகளிக்கலாம். மொழிகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு சேனல்களில் போட்டிகள் ஒளிபரப்பப்படவுள்ளன. அதன் விவரம் இதோ:

தமிழ்: ஸ்டார் விஜய் சூப்பர் (Star Vijay Super)
தெலுங்கு: மா மூவிஸ் (Maa Movies)
மலையாளம்: ஏசியாநெட் மூவிஸ் (Asianet Movies)
கன்னடம்: சுவர்ணா பிளஸ் (Suvarna Plus)
பஞ்சாபி: பிடிசி பஞ்சாபி (PTC Punjabi)
இந்தி: தூர்தர்ஷன் (முதல் 11 போட்டிகள்) மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் (DD Sports - கடைசி 9 போட்டிகள்).

நம்ம ஊர் சென்னை கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா? ஆர்யா, விஷ்ணு விஷால் போன்றவர்களின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆட்டம் ஆரம்பம்!

Story first published: Friday, January 16, 2026, 17:32 [IST]
Other articles published on Jan 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+