Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CCL 2026: விக்ராந்தின் அதிரடி அரைசதம் வீண்.. கடைசி ஓவரில் கோலிவுட் சென்னை அணி தோல்வி.. பைனலில் கர்நாடகா

கோவை: CCL 2026 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கோலிவுட்டின் சென்னை கிங்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கர்நாடகா புல்டோசர்ஸை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றள்ளது. கோவையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், கிச்சா சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் விக்ராந்த் சந்தோஷ் தலைமையிலான வெல்ஸ் சென்னை கிங்ஸ் அணியும் மோதின.

இந்த பரபரப்பான கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 6:45 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற வெல்ஸ் சென்னை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. விக்ராந்த் சந்தோஷ் மற்றும் ரமணா தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.

விக்ராந்த் சந்தோஷ் இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசி ரன் விகிதத்தை உயர்த்தினார். அவர் வெறும் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை கிங்ஸ் அணி மிக விரைவாக 50 ரன்களை கடந்து சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது.

ரமணா விரைவில் அவுட்டாகி தர்லிங் கிருஷ்ணாவுக்கு முதல் விக்கெட்டை கொடுத்தார். சாந்தனு 5 ரன்களில் வெளியேற கர்நாடகா புல்டோசர்ஸ் இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தியது. பின்னர் பிரித்வி பாண்டியராஜன் டக் அவுட் ஆனார். விக்ராந்த் சந்தோஷின் அதிரடி ஆட்டம் 24 பந்துகளில் 66 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.

சச்சின் தனது மூன்றாவது விக்கெட்டை எடுக்க, சென்னை கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்தது. கரண் தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தி, 12 ரன்களில் அசோக் செல்வனை வீழ்த்தினார். ஆதவ் ஒரு சிக்ஸர் அடித்து சென்னை கிங்ஸ் அணியை 150 ரன்களை தாண்ட வைத்தார். அவர் 31 ரன்களில் ரன் அவுட்டானார்.இறுதிப்பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்ற பாரி அவுட்டானார். இறுதியில், சென்னை கிங்ஸ் அணி 160 ரன்கள் எடுத்தது.

கர்நாடகா புல்டோசர்ஸ் வெற்றிபெற 161 ரன்கள் தேவைப்பட்டது. இது ஒரு சவாலான இலக்காக அமைந்தது.கர்நாடகா புல்டோசர்ஸ் சார்பில் தர்லிங் கிருஷ்ணா மற்றும் நிரூப் பண்டாரி ஆகியோர் ரன் சேஸிங்கைத் தொடங்கினர். நிரூப் பண்டாரி 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஆதவ் ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, சண்டன் குமாரை கோல்டன் டக் அவுட் ஆக்கினார், கர்நாடகா அணியின் நிலை மிகவும் மோசமாகத் திகழ்ந்தது.

தர்லிங் கிருஷ்ணா 20 ரன்களில் வெளியேறினார், ராஜீவ் ஹானு கோல்டன் டக் அவுட் ஆனார். சென்னை கிங்ஸ் விக்கெட் கீப்பர் சத்யா ஸ்லேஜிங் மூலம் கர்நாடகா வீரர்களைத் திசைதிருப்பினார். ரன் சேஸிங்கில் இருந்த கர்நாடக பேட்ஸ்மேன் கரனுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் வலி ஏற்பட்டது. "பை-ரன்னர்" குறித்து கிச்சா சுதீப் கள நடுவர்களுடன் விவாதித்து, விக்ராந்த் சந்தோஷ் ஒப்புதல் அளித்த பின் தர்லிங் கிருஷ்ணா பை-ரன்னராக களமிறங்கினார்.

கரண் அசோக் செல்வனிடம் கேட்ச் ஆனார், கர்நாடகா புல்டோசர்ஸ் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. 15 ஓவர்கள் முடிவில் கர்நாடகா 115/5 என இருந்தது, கடைசி 30 பந்துகளில் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. மஞ்சுநாத் அவுட்டான பிறகு, கார்த்திக் இரண்டு பவுண்டரிகளை அடித்து கர்நாடகா புல்டோசர்ஸை போட்டியில் நிலைநிறுத்தினார்.

கார்த்திக் 43 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்து, அடுத்த பந்திலேயே அவுட்டானார். இதனால் கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கிச்சா சுதீப் வெற்றி ரன்களை அடித்து, கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் பெங்கால் டைகர்ஸை எதிர்கொள்ள கர்நாடகா தகுதிப் பெற்றது.

Story first published: Sunday, February 1, 2026, 0:13 [IST]
Other articles published on Feb 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+