Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CCL 2026: பாலிவுட்டை பந்தாடிய கோலிவுட்.. விக்ராந்த் 149 ரன்கள் குவிப்பு.. அரையிறுதிக்கு சென்னை தகுதி

கோவை: CCL 2026 இறுதி லீக் சுற்றில் விக்ராந்த் சந்தோஷ் தலைமையிலான சென்னை கிங்ஸ் மற்றும் சாகிப் அலீம் தலைமையிலான மும்பை ஹீரோஸ் அணிகள் மோதின. இந்த வெற்றி சென்னை கிங்ஸ் அணியின் அரையிறுதி வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கடும் போட்டியாக அமைந்தது.

டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. விக்ராந்த் சந்தோஷ் மற்றும் ரமணா தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். போட்டியின் தொடக்கத்திலிருந்தே சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் விக்ராந்த் சந்தோஷ் 149 ரன்கள் குவித்து மும்பை பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். 24 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 50 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்தார்.

மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டாலும், நடுவர்கள் ஆட்டம் தொடரும் என அறிவித்தனர். அதன்பின் விக்ராந்த் தனது அதிரடியை மேலும் தொடர்ந்தார். பிர்த்வி 33 ரன்களில் ஆட்டமிழக்க, ரமணாவின் ஒரு முக்கியமான கேட்சை மும்பை அணி நழுவவிட்டது. இந்த லைஃப்லைன் காரணமாக சென்னை அணி 50 ரன்களை விரைவாகக் கடந்தது.

சென்னை அணி பவர்பிளே முடிவில் 66/1 என வலுவான நிலையில் இருந்தது. 15 ஓவரில் சென்னையின் ஸ்கோர் 150ஐத் தாண்டியது. இறுதியில், விக்ராந்த் சந்தோஷ் 149 ரன்களில் ஆட்டமிழக்க, வெல்ஸ் சென்னை கிங்ஸ் அணி 225 ரன்கள் குவித்தது. மும்பை ஹீரோஸ் அணி வெற்றிபெற 226 ரன்கள் தேவைப்பட்டது.

ஷரன் பந்துவீச,சாகிப் மற்றும் நிஷாந்த் மும்பை அணிக்குத் தொடக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், சாகிப் சலீம் 25 பந்துகளில் தனி ஒருவராகப் போராடி அரைசதம் அடித்தார். அசோக் செல்வன் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, மும்பை ஹீரோஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.

மும்பை அணி 12 ஓவர்களுக்குள் இலக்கை எட்டத் தவறியதால், அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியது. இறுதியில் சோஹைல் கான் விக்கெட்டை விக்ராந்த் சந்தோஷ் கைப்பற்ற, சென்னை கிங்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி சென்னை கிங்ஸ் அணியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Story first published: Monday, January 26, 2026, 20:58 [IST]
Other articles published on Jan 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+