Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CCL 2026: கர்நாடக அணி 3வது முறையாக சாம்பியன்.. சுதீப் கீச்சா தலைமையில் சாதனை.. 12 ஆண்டுக்கு பிறகு கோப்பை

கோவை: CCL 2026 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி வங்காள டைகர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான மோதலில், கர்நாடகா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

இறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிஷ்ஷு செங்குப்தா தலைமையிலான வங்காள டைகர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஜாய் முகர்ஜி மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக 40 பந்துகளில் தனது அரை சதத்தைப் பதிவுசெய்தார். அவர் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

இருப்பினும், வங்காள அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர். விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தபோது, ராகுல் மசூம்தரின் (தொடர் நாயகன்) விக்கெட்டும் வீழ்ந்தது, இது அணியின் சரிவுக்கு வழிவகுத்து, அந்த அணி 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

130 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் அணிக்கு ராஜீவ் ஹனுவின் அதிரடி ஆட்டம் வலுவான தொடக்கத்தை அளித்தது. அவர் வெறும் 23 பந்துகளில் தனது அரை சதத்தைப் பதிவுசெய்து, மூன்று தொடர்ச்சியான பவுண்டரிகளை அடித்தார். இதன்மூலம், பவர் பிளே முடிவில் கர்நாடகா அணி 58/1 என்ற வலுவான நிலையில் இருந்தது.

நிதுப் பண்டாரி ஆரம்பத்திலேயே வெளியேறிய போதிலும், ராஜீவ் ஹனுவின் ஆக்ரோஷமான ஆட்டம் பௌலர்களைத் திணறடித்தது. அவர் ஒன்பது பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரைத் தொடர்ந்து டார்லிங் கிருஷ்ணாவின் ஆட்டம் மிகவும் நிதானமாக இருந்தது, அவர் 20 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

கரன் ஆர்யன் மற்றும் ராஜீவ் ஹனு வெளியேறிய பிறகு, கர்நாடகா அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. ஒரு கட்டத்தில் 29 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்பட்டவில்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில், கேப்டன் கிச்சா சுதீப் களத்திற்குள் நுழைந்து மஞ்சுநாத்துக்கு அறிவுரை வழங்கியது விதிமீறலாகக் கருதப்பட்டு, வங்காள டைகர்ஸ் அணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கார்த்திக் (15*) மற்றும் மஞ்சுநாத் (20*) நிதானமாக விளையாடி அணியை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் சென்றனர். வங்காள டைகர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் விக்கெட்டுகளை எடுத்தாலும், கர்நாடகா அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோப்பையை வென்றனர்.

இந்த சீசனில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. வெல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் விக்ராந்த் சந்தோஷ் சிறந்த ஃபில்டர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதுகளைப் பெற்றார். அதே அணியைச் சேர்ந்த ஆதவ் சிறந்த பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் (Player of the CCL 2026) விருதை வங்காள டைகர்ஸ் அணியின் ராகுல் மசூம்தர் தட்டிச் சென்றார்.

Story first published: Monday, February 2, 2026, 9:00 [IST]
Other articles published on Feb 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+