Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிசிஎல்: 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரைனோஸை வீழ்த்தியது கர்நாடகா புல்டோஸர்ஸ்

பெங்களூர்: சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் 3 வது வது நாளான இன்று, ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

சிசிஎல் என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி இந்த வருடம் 6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் போட்டியின் 3 வது நாளான இன்று சென்னை ரைனோஸ் அணி கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி கேப்டன் ஆர்யா முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்களை குவித்தது.

சிசிஎல்

சிசிஎல்

சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜீவா விலக, ஜீவாவிற்குப் பதிலாக நடிகர் ஆர்யாவை சென்னை ரைனோஸ் அணியின் புதிய கேப்டனாக தற்போது நியமித்து இருக்கின்றனர்.

சென்னை ரைனோஸ் vs கர்நாடகா புல்டோசர்ஸ்

சென்னை ரைனோஸ் vs கர்நாடகா புல்டோசர்ஸ்

சிசிஎல் கிரிக்கெட் போட்டியின் 2 வது நாளான இன்று ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற ஆர்யா முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

வலுவான அடித்தளம்

வலுவான அடித்தளம்

கர்நாடகா அணிக்கு ராகுல் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.. 19 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அவர் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து விளையாடிய ராஜீவ் வெறும் 12 பந்துகளில் சுமார் 40ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.20 ஓவர் முடிவில் 211 ரன்களை கர்நாடகா புல்டோசர்ஸ் அணி குவித்தது.

ரன்களை வாரி

ரன்களை வாரி

சென்னை அணியைப் பொறுத்தவரை விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் வள்ளல்களாக மாறி ரன்களை வாரி வழங்கினர்.இதனால் தான் கர்நாடகா அணியால் 211 என்ற இமாலய இலக்கை எட்ட முடிந்தது.

ஒற்றை இலக்கம்

ஒற்றை இலக்கம்

ரன்களை வரி வழங்கிய சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கிலும் தொடர்ந்து சொதப்பியது. விஷ்ணு விஷால்(6 ரன்), ரமணா(4 ரன்),ஆர்யா(1 ரன்) என்று பெரும்பாலோர் ஒற்றை இலக்க எண்களிலேயே ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக

அதிகபட்சமாக

சென்னை அணியில் கலையரசன் அதிகபட்ச ரன்களை எடுத்திருந்தார். கர்நாடகா அணியின் சார்பில் 21 ரன்களை உதிரியாக வாரி வழங்கியிருந்தனர்.

சென்னை ரைனோஸ் தோல்வி

சென்னை ரைனோஸ் தோல்வி

19 ஓவர்கள் முடிவில் சென்னை ரைனோஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் சுமார் 83 ரன்கள் வித்தியாசத்தில் சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

Story first published: Friday, January 16, 2026, 19:05 [IST]
Other articles published on Jan 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+