Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிசிஎல்: 64 பந்துகளில் 'செஞ்சுரி' போட்டு விக்ராந்த் அதிரடி

சென்னை: அகில் அக்கினேனியின் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் ஆர்யாவின் சென்னை ரைனோஸ் மோதிய சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார் நடிகர் விக்ராந்த்.

சிசிஎல் என்று அழைக்கப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் 6 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்யாவின் சென்னை ரைனோஸ் அணி கடந்த முறை கர்நாடாகா அணியிடம் மோதி தோல்வி அடைந்தது.

CCL Actor Vikranth Scored 100 Runs

இந்நிலையில் இன்று அகில் அக்கினியின் தெலுங்கு வாரியர்ஸ் அணியை எதிர்த்து ஆர்யாவின் சென்னை ரைனோஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ரைனோஸ் 20 ஓவர் முடிவில் 164 ரன்களைக் குவித்தது. இதில் நடிகர் விக்ராந்த் அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 100 ரன்களைக் குவித்தார்.

போனமுறை கர்நாடகா அணியிடம் அடைந்த தோல்விக்கு சென்னை வீரர்களின் பேட்டிங் சொதப்பல் மிகப்பெரிய பங்கை வகித்தது.இந்நிலையில் இன்று சென்னை அணி வீரர்கள் பேட்டிங்கில் அசத்தி ரன்களைக் குவித்தனர்.

சென்னையைத் தொடர்ந்து அகில் அக்கினியின் தெலுங்கு வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 76 ரன்களை அந்த அணி எடுத்திருக்கிறது.

Story first published: Friday, January 16, 2026, 19:10 [IST]
Other articles published on Jan 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+