சினிமா நட்சத்திரங்களின் சிசிஎல் கிரிக்கெட் 6வது சீசன்.. இம்மாதம் 23ல் தொடக்கம்
சென்னை: இந்திய சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சி.சி.எல் என்று அழைக்கப்படும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் ஆண்டு தோறும் நடந்து வருகிறது.
மொத்தம், 8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டி இவ்வாண்டு ஜனவரி 23ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
2 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், மும்பை ஹீரோஸ்-பஞ்சாப் டீ ஷேர் அணிகள் மோதுகின்றன. இவ்வாண்டு நடைபெறுவது 6வது சீசனாகும்.

முதல் போட்டி
23ம் தேதியன்று, மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், தெலுங்கு வாரியர்ஸ்-கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது போட்டி
பெங்களூர் மட்டுமின்றி, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, சண்டிகர், உள்ளிட்ட நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.

சென்னை, கர்நாடகா
இந்த போட்டித்தொடரில் சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடக புல்டோசர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டீ ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 சினி உலகை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

ஜீவா, பரத்
சென்னை அணிகக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை அணியை சேர்ந்த ஜீவா, ஷாம், பரத், சாந்தனு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

ஸ்ரீசாந்த் களமிறக்கம்
இவர் இந்த வருடம் தெலுங்கு வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்ரீசாந்த் செயல்பட இருக்கிறார். தெலுங்கு வாரியர்ஸ் அணியில் பயிற்சியாளராக இடம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications