For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

15 ஆண்டுகளில் 510 கிமீ ஓடிய விராட் கோலி.. யாருக்குமே தெரியாத கிங் கோலியின் சாதனைகள்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றுடன் சர்வதேச அரங்கில் அடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் ஆகிறது. விராட் கோலி தனது முதல் போட்டியை இலங்கைக்கு எதிராக தனது 19 ஆவது வயதில் விளையாடினார்.

மேலும் அறிமுக போட்டியில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார் இது தற்போது வரை ஒரு ரெக்கார்டாக பார்க்கப்படுகிறது. விராட் கோலியின் ரசிகர்கள் ரன் மிஷின் என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

celebrating the 15 years of virat kohli and his unique stats and record

பவுண்டரியை அடிக்க முடியாத மைதானங்களில் ரன் ஓடியே அணியின் ஸ்கோரை உயர்த்தி வெற்றி பெற்று விடுவார். அந்த அளவுக்கு விராட் கோலிக்கு உடல் தகுதியும் கிரிக்கெட் நுணுக்கங்களும் அத்துபிடி. இந்த நிலையில் விராட் கோலி கிரிக்கெட் களத்தில் பேட்டிங் செய்யும்போது ரன் ஓடுவதற்காக மட்டும் 15 ஆண்டுகளில் 510 கிலோமீட்டர் ஓடி இருக்கிறார் என்று ESPN cricinfo தரவுகள் வெளியாகி இருக்கிறது. பவுண்டரி அல்லாத ரன்களில் விராட் கோலி 277 கிலோ மீட்டரும் மற்ற வீரர்கள் சேர்க்க நான் ஸ்டிரைக்ரில் இருப்பவரும் ஓடவேண்டும் அல்லவா அதற்காக ஒரு 233 கிலோ மீட்டர் ஓடி இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 13,748 ரன்களை ஓடியே எடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் 2014 மற்றும் 2016 டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற விராட் கோலி சேஸிங் மாஸ்டராக திகழ்ந்திருக்கிறார். விராட் கோலி t20 கிரிக்கெட்டில் சேசிங் செய்யும் போது பத்து போட்டிகளில் ஒன்பதில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. அதில் எட்டு முறை இவர் நாட் அவுட் ஆக இருந்திருக்கிறார்.

விராட் கோலி மொத்தமாக 83 மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். இதில் 46 மைதானங்களில் கோலி சதம் அடித்திருக்கிறார். இதில் அடிலெய்ட் மைதானம் தான் விராட் கோலிக்கு மிகவும் பிடித்தது. அங்கு மட்டும் ஐந்து சதங்கள் அவர் அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 53 மைதானங்களில் சதம் அடித்திருக்கிறார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 9 அணிகளிடமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆணிகளிடமும் விராட் கோலி சதம் அடித்திருக்கிறார்.

இது மற்றொரு சாதனையாக பார்க்கப்படுவது. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து பத்து இன்னிங்ஸில் சேர்த்தால் ஆயிரம் ரன்கள் வரை விராட் கோலி அடித்திருக்கிறார். இந்த சாதனையை அவர் 8 முறை நிகழ்த்திருக்கிறார். டேவிட் வார்னர் ஒருமுறை நிகழ்த்தியுள்ளார்.விராட் கோலி 2016 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்கள் என்ற மைல் கல்லை ஒரே ஒரு முறை தான் கடந்திருக்கிறார்.இதனை சில கிரிக்கெட் விமர்சகர்கள் குறையாக சொன்ன நிலையில் 2016ம் ஆண்டு முதல் 19 ஆம் ஆண்டு வரை விராட் கோலி 15 டெஸ்ட் சதங்களை அடுத்து இருக்கிறார்.

இதில் அவர் ஏழை இரட்டை சதமாக மாற்றி இருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு தொடர்களில் தொடர்ந்து இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார். இந்த சாதனையை அவர் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக படைத்தார். இதேபோன்று விராட் கோலி கேப்டனாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 5 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக மூன்று முறை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

Story first published: Friday, August 18, 2023, 13:07 [IST]
Other articles published on Aug 18, 2023
English summary
celebrating the 15 years of virat kohli and his unique stats and record 15 ஆண்டுகளில் 510 கிமீ ஓடிய விராட் கோலி.. யாருக்குமே தெரியாத கிங் கோலியின் சாதனைகள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+