டெல்லியில் ரிஷப் பந்த் ருத்ரதாண்டவம்... ஐபிஎல்லின் 50வது சதம்.... 500 ரன்களை கடந்தார்!
Recommended Video

டெல்லி: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக சதமடித்தார். இந்த சீசனில் அடிக்கப்படும் மூன்றாவது சதம் இதுவாகும்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணியின் மற்ற வீரர்கள் சரியாக விளையாட நிலையில், விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 128 ரன்கள் எடுத்தார்.
இது இந்த சீசனில் அடிக்கப்படும் மூன்றாவது சதமாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன் 106 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுத்தார்.
மேலும், 521 ரன்களுடன், இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, ஆரஞ்ச் கேப்பையும் பந்த் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications