Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி.. அதிரடி மன்னன் பொல்லார்டையே வேடிக்கை பார்க்க வைத்த வால்டன்!

பிராவிடன்ஸ் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சாட்விக் டால்டன் அதிரடி ஆட்டத்தால் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டிக்கான அணியை தேர்வு செய்யும் தகுதிப் போட்டி நடைபெற்றது. முதல் தகுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

Chadwick Dalton scored 46 runs from 22 balls in CPL T20

நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சயிம் அயுப் 39 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டரில் அசாம் கான் 27 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவர்களில் ரொமாரியோ ஷெப்பர்ட் 6 பந்துகளில் 16 ரன்களும், குடாகேஷ் மோட்டி 8 பந்துகளில் 19 ரன்களும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது, நைட் ரைடர்ஸ் அணி 167 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன், கீரான் பொல்லார்டு, ஆண்ட்ரே ரஸ்ஸல் என பல அதிரடி வீரர்கள் இருந்தனர்

இந்த நிலையில், அந்த அணியின் துவக்க வீரர் சாட்விக் டால்டன் மிக நிதானமாக ஆடினார். மற்றொரு துவக்க வீரர் மார்க் டேயால் 15, நிக்கோலஸ் பூரன் 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் ஒரு கட்டத்தில் சாட்விக் டால்டன் 35 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஆமை வேகத்தில் ஆடிக் கொண்டு இருந்தார். அப்போது கீரான் பொல்லார்டு களத்துக்கு வந்தார்.

பொல்லார்டு தன் அதிரடியால் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சாட்விக் டால்டன் அதிரடிக்கு மாறினர். அவர் சந்தித்த அடுத்த 22 பந்துகளில் 46 ரன்களை குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். முதல் 35 பந்துகளில் 3 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்த அவர், அடுத்த 22 பந்துகளில் கூடுதலாக 3 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார். பொல்லார்டு 15 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்.

நைட் ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்த சீசனின் கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

Story first published: Thursday, September 21, 2023, 10:20 [IST]
Other articles published on Sep 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+