Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹல், குல்தீப் இருக்காங்களே.. அவங்க தான் ஐடியோ கொடுத்தாங்க.. பிரதமரிடம் போட்டுக்கொடுத்த ரோகித்!

டெல்லி: டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய நிலையில், நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. இதன்பின் இந்திய அணி வீரர்கள் 4 நாட்களுக்கு பின் நேற்று காலை நாடு திரும்பினர். டெல்லி வந்த இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காலை விருந்தளித்து வாழ்த்து கூறினார்.

Indian Cricket Team Mumbai Team India Hardik Pandya Wankhede Stadium

இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுடன் நரேந்திர மோடி உரையாடிய வீடியோ வெளி வந்துள்ளது. அதில் டி20 உலகக்கோப்பை பெறும் போது இந்திய அணி ரோகித் சர்மா, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி எப்படி உலகக்கோப்பையை வாங்கினாரோ அதே ஸ்டைலில் நடந்து சென்று வாங்கினார். இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது.

இதுகுறித்து பிரதமர் மோடி கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோகித் சர்மா, அனைவரும் டி20 உலகக்கோப்பையை வாங்கும் போது சாதாரணமாக வாங்க வேண்டாம். கொஞ்சம் ஸ்டைலாக வாங்க வேண்டும் என்று கூறினர். அதனால் அவ்வாறு நடந்து சென்றேன் என்று பதில் அளித்தார். அதற்கு மீண்டும் மோடி, அந்த ஐடியாவை கொடுத்தது சாஹல் தானே? என்று மறுகேள்வி எழுப்பினார்.

Indian Cricket Team Mumbai Team India Hardik Pandya Wankhede Stadium

தொடர்ந்து ரோகித் சர்மா, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் அப்படி வாங்கலாம் என்று கூறியதாக தெரிவித்தார். அதேபோல் பிரதமர் 6 மாதங்களாக காயம், கிண்டல் என்று அனைத்தையும் எப்படி சமாளிதீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு, நான் எப்போதும் என்னுடைய செயல்பாடுகள் மூலமாகவே விமர்சனங்களுக்கு பதிலளிக்க விரும்புவேன். இம்முறையும் அதையே செய்தேன் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது வீரர்களின் ஓய்வறைக்கே சென்று ஆறுதல் கூறினார். தற்போது இந்திய அணியின் வெற்றியின் போது அந்த பயணத்தை வீரர்களை நேரில் சந்தித்து கேட்டறிந்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Friday, July 5, 2024, 20:57 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+