Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஹல் போஸ்ட் போட.. அதுக்கு டேனியலி வந்து கமெண்ட் போட.. என்னம்மா சத்தம் அங்க??!!!

மும்பை: யுஸ்வேந்திர சஹலுக்கு கிரிக்கெட் விளையாட நேரம் கிடைக்காவிட்டால் சமூக வலைதளங்களில் புகுந்து சூப்பராக விளையாடுகிறார். சமீபத்தில் டிக்டாக் போட்டு கலக்கினார். இப்போது அவர் போட்ட ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் கலகலப்பைக் கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹல். அவருக்கு டிக்டாக் ரொம்பப் பிடிச்சது. எப்ப நேரம் கிடைச்சாலும் உடனே டிக்டாக்குக்குள் புகுந்து கொள்வார். இந்த டிக்டாக்குகள் அவரை பிரபலமாகவும் ஆகச் செய்கின்றன.

சமீபத்தில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து அவர் செய்த டிக்டாக் வைரலானது. அந்தப் பெண் சஹலின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி விளையாடிய காட்சியை பலரும் ரசித்துப் பார்த்தனர். இந்த நிலையில் இன்னொரு பெண் வந்து சஹலை சீண்டியுள்ளார்.

சஹலின் டிரஸ்ஸிங் ரூம் போட்டோ

சஹலின் டிரஸ்ஸிங் ரூம் போட்டோ

சஹல் ஒரு டிரஸ்ஸிங் ரூம் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் உள்ளனர். எதையோப் பார்த்து என்னமோ பேசுவது போல உள்ளது இந்த புகைப்படம். ஆனால் எந்த இடம், என்ன போட்டி என்பதை சஹல் சொல்லவில்லை. மாறாக, இதுகுறித்து ஏதாவது கமெண்ட் சொல்லுங்களேன் என்று கேட்டிருந்தார்.

ரசிகர்கள் குவித்த கமெண்ட்டுகள்

ரசிகர்கள் குவித்த கமெண்ட்டுகள்

விடுவார்களா நம்ம கிரிக்கெட் ரசிகர்கள்.. உள்ளே புகுந்து ஆளாளுக்கு ஒன்றை சொல்ல ஆரம்பித்து விட்டனர். அது செம காமெடியாக இருந்தது. போக இன்னொரு சுவாரஸ்யமும் தொற்றிக் கொண்டது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனியலி வியாட் ஒரு கமெண்ட்டைப் போட்டு டோட்டலாக எல்லோரையும் தன் பக்கம் திருப்பி விட்டார்.

டேனியலியின் குறும்பு கமெண்ட்

டேனியலியின் குறும்பு கமெண்ட்

டேனியலி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ரொம்பப் பிரபலம். இந்திய வீரர்களுடன் அடிக்கடி இதுபோல சமூக வலைதளங்களில் வந்து கலாய்த்து விட்டுப் போவார். 28 வயதான இவர் மீண்டும் சஹல் போஸ்ட் மூலம் கலகலப்பாக்கி விட்டார். சஹல் போட்ட போட்டோவுக்கு "Gimme the chocolates" என்று கருத்து பதிவிட்டுள்ளார் டேனியலி.

எனக்கும் சாக்லேட் கொடுங்கப்பா

எனக்கும் சாக்லேட் கொடுங்கப்பா

அதாவது எனக்கும் சாக்லேட் கொடுங்க என்று கேட்பது போல இருக்கிறதாம் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால். இதற்கு பலரும் வந்து, ஆம் கரெக்டாக சொல்லி விட்டீர்கள். அப்படித்தான் இவர்கள் கேட்டிருப்பார்கள் என பதில் போட்டுக் கொண்டுள்ளனர். இதுபோல இந்திய வீரர்களை கலாய்ப்பது டேனியலிக்கு புதிதில்லை. இதற்கு முன்பும் கூட நிறைய முறை கலாய்த்துள்ளார்.

பாராட்டத் தவறாத வீராங்கனை

பாராட்டத் தவறாத வீராங்கனை

அதேசமயம், இந்திய வீர்ரகளைப் பாராட்டி கமெண்ட் போடவும் அவர் தயங்க மாட்டார். மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றபோது இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் போட்டவர் டேனியலி. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ரசிகரும் கூட. டேனியலி சமீபத்தில் நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் கலந்து கொண்டார். அதில் பெரிய அளவில் அவர் சோபிக்கவில்லை.

ஐபிஎல் வீரர்களின் ஓய்வு

ஐபிஎல் வீரர்களின் ஓய்வு

அவரது இங்கிலாந்து அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டு இந்தியா இறுதிப் போட்டிக்கு போனது நினைவிருக்கலாம். தற்போது ஐபிஎல் போட்டிகள் ரத்தாகி விட்டதால் அதில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்த வீரர்கள் எல்லோரும் இப்போது ஓய்வில் இருந்து வருகின்றனர். இதனால் டிக்டாக், உடற்பயிற்சி என்று பொழுதைப் போக்கி வருகின்றனர்.

Story first published: Tuesday, March 24, 2020, 13:24 [IST]
Other articles published on Mar 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+