For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பையில் இடம் பெற்ற சாஹல் மனைவி.. ஹே எப்புட்றா?

மும்பை : இந்திய அணியில் இருந்து சாஹல் நீக்கப்பட்டு சில மாதங்கள் ஆகின்றன. அவருக்கு அடுத்து நடைபெற உள்ள 2023 உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுக்கு உலகக்கோப்பை தொடரில் பங்காற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஃப் ஸ்பின்னரான சாஹல் ஐபிஎல் தொடரில் கூட சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், இந்திய அணியில் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் தான் தேவை என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

Chahal wife to participate in ICC world cup 2023 anthem

இப்படி ஒரு சூழலில் தான் உலகக்கோப்பையில் பங்கேற்க சாஹலுக்கு கிடைக்காத வாய்ப்பு, அவரது மனைவிக்கு கிடைத்துள்ளதா? என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

தனஸ்ரீ வர்மா பிரபல யூட்யூபர் ஆவார். சிறந்த நடன கலைஞரான அவர் நடனம் கற்றுக் கொடுத்தும் வருகிறார். தனது யூட்யூப் சேனலில் நடனம் ஆடி அதை வீடியோவாக பகிர்ந்து வருகிறார். சாஹலை திருமணம் செய்யும் முன்பு இருந்தே அவர் வட இந்திய அளவில் யூட்யூபில் பிரபலமானவராக இருந்தார். சுமார் 55 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அவரது நடனத் திறமையால் தான் இப்போது அவருக்கு உலகக்கோப்பை தொடரில் முக்கிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த உள்ள ஐசிசி, அதற்கான பாடல் ஒன்றை வெளியிட உள்ளது.
அந்தப் பாடலில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனம் ஆட உள்ளார். அவருடன் தனஸ்ரீ வர்மாவும் நடனம் ஆட இருக்கிறார். அந்தப் பாடலுக்கு பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரிதம் இசை அமைத்துள்ளார். அந்தப் பாடலில் மற்ற கிரிக்கெட் நாடுகளின் ரசிகர்களும் இடம் பெற இருக்கிறார்கள்.

இந்தப் பாடல் வெளியாகும் அதே நாளான இன்று, இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியும் வெளியாக உள்ளது. அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் 2023 உலகக்கோப்பை தொடருக்கான உடையை வடிவமைத்துள்ளது. இந்தியா அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆட உள்ளது.

Story first published: Wednesday, September 20, 2023, 9:50 [IST]
Other articles published on Sep 20, 2023
English summary
Chahal wife Dhanashree Verma to participate in ICC world cup 2023 anthem says sources.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+