For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த கொடுமையை எங்க போய் சொல்றது? இந்தியா ஆடும் போட்டிக்கு முன் பிட்ச்-க்கு பூஜை

விசாகப்பட்டினம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டிக்கு முன்னதாக போட்டி நடைபெற உள்ள பிட்ச்-க்கு பூஜை செய்துள்ளனர்.

அதிலும் இந்த பூஜையில் இந்திய அணித் தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் கலந்து கொண்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.

கொஞ்சம் ஓவர் தான்

கொஞ்சம் ஓவர் தான்

ஒரு வேலையை தொடங்கும் முன்பு கடவுளை வணங்கி தொடங்குவது என்பது பலரால் கடைபிடிக்கப்படும் ஒரு விஷயம் தான். ஆனால், கிரிக்கெட் பிட்ச்-சுக்கு பூஜை செய்யும் அளவு அது சென்று இருப்பது தான் கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, வலுவிழந்த அணி என கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது.

வீரர்களை நம்பாத தேர்வுக் குழு

வீரர்களை நம்பாத தேர்வுக் குழு

ஏற்கனவே, தற்போது உள்ள இந்திய அணி தேர்வுக் குழுவானது அதிக அளவு சர்வதேச கிரிக்கெட் விளையாடாத, அனுபவமற்ற ஒரு குழு என சாமானிய ரசிகர்களால் கூட விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், அதன் தலைவரே தான் தேர்வு செய்த வீரர்களை நம்பாமல் பிட்ச்-க்கு பூஜை செய்துள்ளார் என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ஜூனியர் வீரர்கள் போதுமே

ட்விட்டரில் சில ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளார்கள். அதில் சில ட்வீட்களை இங்கே காணலாம். ஒரு ரசிகர் இப்படி கேட்டுள்ளார். "நமக்கு எதற்கு நல்ல வீரர்கள் வேண்டும்? பிட்ச் பூஜை மூலம் நம் வெற்றி பெற்று விடுவோம் என்றால், ஜூனியர் வீரர்களை கொண்டே வெற்றி பெறலாமே?"

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

"யாராவது அவர்களை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஆடும் போதும் இந்த பூஜையை செய்ய சொல்லுங்கள்" என நக்கல் அடித்துள்ளார் மற்றொரு ரசிகர்.

பேட், பால் பூஜை பண்ணலையா?

பிட்ச் பூஜையை பார்த்து இந்த குறும்பு ரசிகருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அது இது தான். "பேட் பூஜை? பந்து பூஜை? இதெல்லாம் இல்லையா?"

தவளை கல்யாணம் செய்து வைப்பார்

"எம்எஸ்கே பிரசாத் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா வெல்ல வேண்டும் என பிட்ச் பூஜை செய்கிறார். அடுத்து, ஆஸ்திரேலியா டெஸ்டில் இந்தியா தடுமாறினால் தவளைக்கு கல்யாணம் செய்து வைப்பார். உடனே, மழை வந்து போட்டி டிரா ஆகி விடும்" என செம கலாய் செய்துள்ளார் இந்த ரசிகர்.

Story first published: Monday, October 29, 2018, 13:28 [IST]
Other articles published on Oct 29, 2018
English summary
Chairman of selectors MSK Prasad performed Pitch Pooja before West Indies match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+