"அதுக்கு ஓகே சொல்லியிருந்தா.. 350 அடிச்சு இந்தியாவ ஜெயிச்சிருப்போம்" - புலம்பும் இலங்கை வீரர்
கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பு குறித்து புலம்பியிருக்கிறார் இலங்கை வீரர் ஒருவர்.
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜுலை.18) கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி எந்தவிதம் சிக்கலும், சிரமும் இன்றி மிக எளிதாக வெற்றிப் பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.

சமிகா கருணரத்னேவீசிய
இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. முதலில், 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருக்கட்டத்தில் அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது, 180 ரன்களை கூட எட்டமுடியாது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், களமிறங்கும் ஒவ்வொரு வீரரும் கணிசமாக 20 - 30 ரன்கள் அடித்துவிட்டு போக, இறுதியில் அந்த அணி 262 ரன்களை எட்டியது. புவனேஷ் குமார் கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 19 ரன்களை குவித்து அந்த அணி 250 ரன்களை கடக்க உதவினார் சமிகா கருணரத்னே.

எங்களுக்குத் தெரியும்
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்களும், இஷான் கிஷன் 59 ரன்களும் எடுக்க, 36.4வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்த வெற்றி குறித்து இலங்கை அணியின் சமிகா கருணரத்னே கூறுகையில், "டாட் பந்துகளை விட விக்கெட்டுகளை பெறவே முயற்சித்தோம். எங்கள் பவுன்சர்களையும் எங்கள் வேகத்தையும் பயன்படுத்த முயற்சித்தோம். இந்தியா ஒரு சிறந்த அணி, அவர்கள் எங்களைத் அட்டாக் செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் விக்கெட்டுகளை எடுத்திருந்தால், அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். பவர்ப்ளேயில் நாங்கள் ஒரேயொரு விக்கெட் மட்டுமே பெற முடிந்தது. பவர் பிளேயில் 2 அல்லது 3 விக்கெட்டை எடுத்திருந்தால், ஆட்டத்தின் போக்கை ஓரளவுக்கு மாற்றியிருக்கலாம்.

அடுத்த மேட்சில் அடிப்போம்
"எங்கள் நிறைய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல தொடக்கங்கள் கிடைத்தன, ஆனால் அதனை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. நாங்கள் பெரிய இன்னிங்ஸை விளையாட முயற்சித்தோம், 42 அல்லது 43 வது ஓவரில் நான் ஷானகாவுடன் பேட்டிங் செய்தபோது கூட, நான் அவரிடம், "சில பெரிய ஷாட்களை அடிக்கலாமா?" என்று கேட்டேன். ஆனால், அவர் 45 வது ஓவர் வரை காத்திருக்கச் சொன்னார். எங்கள் பேட்ஸ்மேன்களில் நிறைய பேர் அதிக நேரம் பேட் செய்ய முடிந்திருந்தால், நாங்கள் ஒரு பெரிய ஸ்கோருக்குச் சென்றிருக்கலாம். 300 அல்லது 350 ரன்கள் அடிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது, இந்த போட்டியில் அதை தவறவிட்டாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் அவ்வளவு ஸ்கோர்ஸ் அடிப்போம் என்று நம்புகிறேன்" என்று முடித்தார்.
Recommended Video

ப்ரித்வி ஷா நிலைமை?
இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை (ஜுலை.20) அதே பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்திய அணியில் பெரிதாக எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனினும், ப்ரித்வி ஷா பேட்டிங் செய்கையில், பந்து ஒன்று அவரது தலையை பலமாக தாக்கியது. அவரும் உடனடியாக அவுட்டாகி சென்றுவிட்டார். ஒருவேளை அவருக்கு ஓய்வு அளிக்கலாம் என்று அணி நிர்வாகம் நினைத்தால், தேவ்தத் படிக்கல் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications