Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடக்கடவுளே.. கேட்ச்-ன் போது ஜஸ்ட் மிஸ்ஸில் தவறிய பந்து.. 4 பற்களை இழந்த இலங்கை வீரர்.. என்ன ஆனது?

இலங்கை: ஃபீல்டிங்கின் போது இலங்கை வீரர் ஒருவர் செய்த விஷயத்தால் பற்கள் உடைந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஐபிஎல் தொடரை போலவே இலங்கையின் உள்நாட்டு தொடரான லங்கா பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 6ம் தேதியன்று தொடங்கிய இந்த தொடர் தொடக்கத்திலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் 4வது லீக் போட்டியில் நேற்று கல்லி கிளாடியேட்டர்ஸ், கண்டி பல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் கண்டி ஃபல்கன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கருணரத்னே காயம்

கருணரத்னே காயம்

இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவம் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 4வது ஓவரில் முதல் பந்தை பிராத்வெய்ட் வீச கண்டி ஃபல்கன்ஸ் அணி வீரர் நுவானிடு ஃபெர்னாண்டோ ஆஃப் சைடில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். ஃபீல்டிங்கில் இருந்த சமீகா கருணரத்னே, பந்தை பிடிப்பதற்காக பின் புறமாக வேகமாக ஓடினார்.

பற்கள் உடைப்பு

பற்கள் உடைப்பு

பந்தை பிடிக்கும் போது, சிறிய கவன சிதறல் ஏற்பட்டதால், அது நேராக கருணரத்னேவின் வாயில் மிகவும் பலமாக பட்டு ரத்தம் வழிய தொடங்கியது. வேகமாக பட்டதால் அவரின் 4 பற்களும் உடைந்து விழுந்ததாக மருத்துவ தரப்பில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல அவரின் உதட்டிலும் நிறைய தையல்களை போட்டுள்ளனர் எனக்கூறப்படுகிறது.

போட்டி விவரம்

போட்டி விவரம்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கல்லி அணியில், டாப் ஆர்டர் வீரர்கள் சற்று சொதப்பினர். மிடில் வரிசை வீரர்கள் சுபசிங்கா 40 (38), இமாத் வாசிம் 34 (39) ஆகியோர் மட்டும்தான் சிறப்பாக விளையாடிர்கள். குஷன் மெண்டிஸ் 14 11), அசாம் கான் 1 (4), சிக்கந்தர் ராசா 9 (7) போன்ற அதிரடி வீரர்கள் ஏமாற்றத்தை கொடுக்க, 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்களை சேர்த்தது.

அபார வெற்றி

அபார வெற்றி

சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஓப்பனிங் வீரர்கள் பதும் நிஷங்கா 22 (21), ஆண்ரே ப்ளட்சர் 20 (14), ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்தனர். இதன்பின்னர் வந்த கமிந்து மெண்டிஸ் 44 (34) சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Story first published: Thursday, December 8, 2022, 22:55 [IST]
Other articles published on Dec 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+